தமிழக அரசின் போக்குவரத்துக்கு துறையின் சார்பாக நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் அரசு போக்குவரத்துக் கழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயனாளிகளுக்கு உணவு இடைவெளி காரணமாக நிறுத்தப்படும். அதன் டெண்டர்களை தமிழக அரசு 2 வருடத்திற்கு ஒருமுறை கோரும். ஒரு ஒரு வருடமும் தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் இந்த டெண்டர் பற்றிய முழு விபரத்தை வெளியிடும். தெளிவாக சொல்லணும் என்றால் போக்குவரத்துக்கு நிற்கும் ஹோட்டல் உரிமையாளர் குறிப்பிட்ட தொகையை போக்குவரத்து கழகத்துக்கு கொடுக்க வேண்டும் அதுதான் முறை.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த ஒரு போக்குவரத்து உணவகத்தில் நிற்க ரூ.102 வசூலிக்கப்பட்டது. சாதரண பேருந்துகள் ரூ.62 கட்ட வேண்டும் என்பது ஹோட்டல் உரிமையாளர்கள் அதிமுக காலத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் 102 ரூபாய் 62 ரூபாய் இருந்ததை விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துக்கு 75 ரூபாயும் சாதாரண பேருந்த்துக்கு 50 கட்ட வேண்டும் என நிர்ணயித்தார். அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துக்கு 27 ரூபாயும் சாதாரண பேரனுக்கு 12 ரூபாயும் ராஜ கண்ணப்பனுக்கு கமிஷனாக சென்றது.
தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கக்கூடிய சிவசங்கர் பதவியேற்ற பிறகு நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் பொலிட்டிக்கல் பி ஏ லூயிஸ் கதிரவன் என்பவரின் பினாமியான வேடசந்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மூலம் முறைகேடு நடைபெற்று வருகிறது.
தங்கவேல் என்பவர் நான் மந்திரி கிட்ட பேசி டெண்டர் வாங்கி தரேன் என்று கூறி ஒரு ஒரு ஹோட்டல் உரிமையாளரின் டிஜிட்டல் கையெழுத்து பெற்று 29 ஹோட்டலுக்கான டெண்டரை ஒரே இடத்தில் இருந்து உரிமம் போட்டு இருக்கிறார். அதே போல் அணைத்து ஹோட்டலுக்கும் சென்று G-Pay மூலமாக 50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவருடைய உதவியாளர் லூயி கதிரவன் அவருடைய பினாமி தங்கவேல் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபைகுமார் சிங் புகாரை வாங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டிஎஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளேன். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது. திமுக அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் வீட்டில் தற்போது அமைச்சர்களை அமலாக்கத்துறை கைது செய்தும், வழக்கு பதிந்து வரும் நிலையில் பயமில்லாமல். தற்போது அமைச்சராக்கள் ஊழலில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.