24 special

விளையாட்டு துறை அமைச்சரின்....விளையாட்டு செயல்!

udhayanithi
udhayanithi

'அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் எம்.பி.,யான ராஜா ஆகியோர் பதவியில் நீடிப்பதை எதிர்த்த மனுக்கள், விசாரணைக்கு ஏற்புடையது அல்ல' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அட்வகேட் ஜெனரல் வாதாடினார்.சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றனர். இதில் சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால் வெடித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவருமே விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் கூட சனாதன ஒழிப்பை நியாயப்படுத்திதான் இருந்தது. 


இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஹிந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் டி.மனோகர், கிஷோர்குமார், ஜெயகுமார் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அப்போது விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரின் பேச்சு குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 11ம் தேதி தள்ளிவைத்தனர். இந்நிலையில் மூன்று மனுக்களும், நீதிபதி அனிதா சுமந்த் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு விபரங்களை, 'சிடி'யாக தாக்கல் செய்த ஹிந்து முன்னணி நிர்வாகி மனோகர் சார்பில், மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம் வாதாடினார். மற்றொரு மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வாதாடியதாவது: எம்.எல்.ஏ., அமைச்சர் என்ற முறையில், அனைத்து மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பிட்ட மதத்தை விமர்சித்ததால்,மதச்சார்பற்ற தன்மையை இழந்து விட்டார். இதற்காக, கவர்னரிடம் புகார் கொடுக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்தை நாட, எங்களுக்கு உரிமை உள்ளது.சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே, அறநிலையத் துறையில் பணியாற்ற முடியும். சேகர்பாபு 40000 கோவில்களை அறநிலையத்துறையில் இருக்கும்போது அமைச்சர் சனாதன மாநாட்டில் பங்கேற்றதால், அமைச்சராக தொடரும் தகுதியை இழந்து விட்டார். இவ்வாறு அவர் வாதாடினார். மற்றொரு மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, ''சனாதன தர்மமும், ஹிந்துயிசமும் ஒன்றுதான்,'' என்றார்.இதற்கிடையில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும், எந்த இழப்பும் இதுவரை வராதபோது மனுவை விசாரிக்க கூடாது.

மேலும், தகுதியில்லாத ஒருவரை சட்டவிரோதமாக அமைச்சராக நியமித்தால், அவரை நீக்கும்படி கோரலாம். ஆனால், சட்டப்படி, தகுதிப்படி பதவி வகிப்பவர்களை, பதவி நீக்கம் செய்ய கோர முடியாது. இவ்வாறு அவர் வாதாடினார். தொடர்ந்து விசரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அரசு தரப்பில் வாதாடிய போது எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஹிந்துக்களை பற்றி சனாதன ஒழிப்பில் ஒரு அமைச்சர் பேசியதற்கு எதிராக பல முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தெரியவில்லையா?.மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசியது வருத்தத்தை கொடுத்துள்ளது என்றும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்முன்னதாக  சானதனம் பற்றி உதயநிதி பேசியது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, இதில் பங்கேற்றவர்களை பதவி நீக்கம் கோரி ஆர்ப்பாட்டம், கவர்னரிடம் கடிதம் ஆகியவை திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடந்தது குறிப்பிடத்தக்கது.