Cinema

தமிழ் முன்னணி நடிகருக்கு....ஐகோர்ட் கேள்வி!

vishal
vishal

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், வழக்கை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை அனைத்தும் தரும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் படம் அனைத்தும் லைகா நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. 


அதை விஷால் மீறி வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட்டதனால், விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கமளித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கப்பட்டது. அதன் பின் செப்டம்பர் 25ம் தேதி ஆஜராஜக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் ஆஜரான விஷால் தனது வாங்கி கணக்கு மற்றும் அசையா சொத்துக்கள் விவரங்கள் உள்ளிட்டவை சமர்ப்பித்தார். இருப்பினும் லைகா நிறுவனம் போதுமான தகவலை தாக்கல் செய்யவில்லை என கூறியதால் வழக்கு மீண்டும் ஒத்திவைத்து.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின்படி விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனைகளின்படி ரூ.80 கோடி பரிவர்த்தனை நடந்திருக்கிறது. பணம் இருந்தும் வேண்டும் என்றே தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை விஷால் தராமல் இருப்பதாக லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதியாவது செலுத்த உத்தரவிட வேண்டும் என்று லைகா தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. விஷால் தரப்பு வழக்கறிஞர், லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது பேசிய நீதிபதி ஏன் இன்னும் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 1-ஆம் தேதிக்கு கோர்ட்டு தள்ளி வைத்தது. முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்திள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்ந்து  ஒத்திவைக்கப்படுவது விஷாலின் பெயர்க்கு தான் களங்கம் ஏற்படுவதாக கருதுகின்றனர்.