24 special

50கோடி கையெழுத்து பெற்றாலும் நீட்டை ஒழிக்க முடியாது- பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

mkstalin
mkstalin

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மும்முரமாக செய்த்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பல்வேறு நிகழ்ச்சிக்காக தருமபுரி மாவட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஜனாதிபதி தமிழகம் வருகையின்போது நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பது கேள்வியாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு.பெட்ரோல் குண்டுவீச்சு போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், அதனை தடுப்பதும் தமிழக அரசின் கடமை. திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு முடிவடைந்து விட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்று அவர் மட்டுமே கூறி வருகிறார். மக்களிடம் களத்தில் கேட்டால் 90 சதவீதம் என்பது பொய் 10 சதவீதம் மட்டுமே செய்துள்ளனர் என்று கவலையாக தெரிவித்து வருகின்றனர். வெறும் பொய் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். 

பெண்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குளறுபடி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூறினர். அதுகுறித்தும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் முன் எடுக்கவில்லை. 

'நீட்' தேர்வு என்று திமுக ஒட்டுமொத்த மாணவர்களையும் குழப்பத்தில் தள்ளி விடுகிறது. நன்றாக படிக்கும் மாணவர்களிடம் நீட் என்று கூறி படிக்க விடாமல் தடுத்து வருகிறது. இன்னிக்கு இந்தியா முழுக்க நீட் தேர்வு இருக்கிறது. எப்படி தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு தர முடியும். எது நடக்காதோ அதனை கையில் பிடித்து கொண்டு திமுக அதனை வைத்து அரசியல் செய்து வருகிறது. 50 லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் இந்த தேர்வை ஒழிக்க முடியாது. நீட் போன்ற எந்த தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வர். நீட்டை எதிர்க்கிறேன் என்ற பெயரில் திமுக, குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை குழப்பி வருகிறார்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு 20% போனஸை அறிவித்துள்ளது. 30 அல்லது 40 சதவீதம் போனஸ் கோரிய போக்குவரத்து ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பால் நிறைவு இல்லை. மேலும், போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் எண்ணிக்கை பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். அதே போல விஜய பிரபாகரனுக்கு என் பொறுப்பு என்பதை பொதுக் குழு கூடி முடிவு செய்யும்" என்று கூறினார்.