Cinema

பிரபல இயக்குனர் மனைவியின் பரிதாப நிலைமை....கண்டுகொள்ளாத திரைத்துறை!

vikraman
vikraman

இயக்குநர் விக்ரமன் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு கிட்டத்தட்ட 5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனை கண்டு தினமும் கண்ணீர் மல்கும் இயக்குனர் விக்ரமன்.


இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த விக்ரமன் புதுவசந்தம் என்ற முதல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் எடுத்த படங்கள் அனைத்தும் திரை துரையின் உச்சத்திற்கு சென்றார்.

இந்த நிலையில், அவரது மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து வருடங்களாக படுத்தப் படுக்கையாக உள்ளார். பரதநாட்டியம், குச்சிபுடி கலைஞரான ஜெயப்பிரியா தமிழ் நாட்டில் 4000 மேடைகளில் நடனம் ஆடியவர். மருத்துவ குளறுபடியால் கடந்த ஐந்து வருடங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார். உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பிரச்சினை ஏற்படுத்த தற்போது கிட்னி பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எனக்கு ஆரம்பத்தில் முதுகு வலி இருந்தது இதனால் மருத்துவமனைக்கு சென்றேன் அப்போது எனக்கு ஸ்கேன் செய்து விட்டு, புற்று நோய்க்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு ஆப்ரேஷன் செய்தல் சரியாகி விடும் என்று கூறினாரக்ள். அரைமணி நேரத்தில் சிகிச்சை முடிந்து விடும் என்று சொன்ன மருத்துவர்கள் எனக்கு 3 மணி நேரமாக சிகிச்சை அளித்தனர்.

இதன் பிறகு பாத்துநாள் கழித்து எனது காலின் விரல்களை அசைக்க முடியாமல் போன பிறகு தான் நான் அறிந்தேன் எனக்கு மருத்துவரக்ள் தவறான சிகிச்சையை அளித்துவிட்டனர் என்று வேதனை அடைந்தேன்.  நானும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அனைத்துவிதமான மருத்துவத்தையும் செய்துவிட்டேன். ஆனால், எனக்கு இதுக்கு மேல என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் என்னுடன் எப்போதும் இரண்டு நர்சுகள் இருக்கிறார்கள், பரதநாட்டிய கலைஞரான என்னால், எழுந்துக்கூட நிற்க முடியவில்லை என்று கண் கலங்கினார்.

என்னை நினைத்து என் கணவர் மிகவும் கவலைப்படுகிறார். அவர் படத்தை இயக்கி சம்பாதித்த ஒவ்வொரு சொத்தையும் விற்றுத்தான் எனக்கான மருத்துவ உதவியை செய்து வருகிறார். இப்போதும் சூர்யவம்சம்2 திரைப்படத்தை எடுக்கும்படி ரசிகர்கள் சமூக தளத்தில் கேட்டு வருவதாக கேள்வி பட்டேன்.. என் கணவரிடம் நான் கூறியதற்கு, என்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போகமாட்டேன் என்கிறார். எப்படி இருந்த உன்னை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை என கண்கலங்குகிறார். 

நானும் அழுதால் அவர் கதறிவிடுவார் என்று 5 வருஷமாக தைரியமாக இருக்கிறேன் என்று கண்கலங்கி பேசினார் இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா. மேலும், இதுவரை திரையுலகினரும் விக்ரமன் குடும்பத்திற்கு பெரிதாக உதவவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கண் கலங்கிய படி பேசிய வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி கண் கலங்க செய்துள்ளது.