24 special

திமுகவை தலைகீழ் மாற்றிய மகளிர் உரிமை தொகை திட்டம்!...நாம் ஒன்று நினைத்தால் நடப்பது ஒன்றாக மாறிவிட்டதே!

mkstain
mkstain

தமிழ்நாட்டில் திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரிய வாக்குறுதியாக கொடுத்தது மகளிருக்கு மாதம் மாதம் பெண்களுக்கு 1000 கொடுக்கப்படும் என்று கூறியது. இந்த ஒற்றை வாக்குறுதி வைத்தே ஆட்சியை பிடித்தது. தற்போது இந்த திட்டமே திமுகவை திருப்பி போட வைத்துள்ளது.


திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு கழித்து இந்த மகளிர் உரிமை திடத்தை கையில் எடுத்தது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலைச்சர் தொடங்கி வைத்தார். அன்றையில் இருந்தே திமுக அரசுக்கு ஏழரை சனி பிடித்தது. 

தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு இந்த திட்டத்தில் விண்ணப்பித்தும் ரூ.1000 தொகை விடுபட்டது. அதற்கு காரணமாக தமிழ்நாடு அரசு கூறியது: தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் கிடைக்கும். மேலும், அரசு துறையில் இருக்கும் பெண்களுக்கு கிடைக்காது என்று கூறியது. முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'இந்த திட்டத்தால் பல பெண்களின் ஓட்டுகளை இழக்கும் அபாயம், திமுகவுக்கு உள்ளது' என கூறியுள்ளார். இதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், இந்த திட்டத்தால், பல லட்சம் பெண்களின் ஓட்டுகள் அக்கட்சிக்கு எதிராகவே திரும்பும்' என்று கூறியிருந்தார். 

இந்த திட்டம் தொடங்கி 3மாதம் ஆன நிலையில் பல மாவட்டத்தில் உள்ள பெண்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதாவது, திட்டம் தொடங்கிய முதல் மாதம் மட்டுமே எங்களுக்கு முறையாக தொகை வந்ததாகவும் நாங்கள் தினசரி கூலிக்கு செல்வதாகவும் கூறுகின்றனர். தகுதியுள்ள பல பெண்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாத நிலையில், 'இறந்து போன பெண்களின் பெயர்களிலும் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது' எனவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறிய திமுக. ஆனால், பல ஊர்களில் பெண்கள் முறையான வசதியுடன் இருக்கின்றனர் அவர்களுக்கு பணம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு விடுபடாமல் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழை மக்கள் எங்களுக்கு தன முறையாக வழங்கப்படவில்லை என்று புகாரை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் நிறைய ஏழை, எளிய பெண்கள் பலர், 1,000 ரூபாய் உரிமை தொகை ஏன் தங்களுக்கு மறுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். எழுத படிக்க தெரியாத பல கிராமத்து பெண்கள் உள்ளூர் ஆளுங்கட்சியினரிடம் முறையிட்டாலும், அவர்களும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதே உண்மை.

எனவே, வரும் லோக்சபா தேர்தலில் மகளிர் உரிமை தொகை திட்டம், திமுகவுக்கு எந்த வகையிலும் சாதகமாக இருக்காது என்பது உறுதியாக தெரிய வருகிறது. மேலும், தற்போது ஆசிரியர்கள், செவிலியர்களை தொடர்ந்து தற்போது பொதுமக்களும் முறையாக 1000 வரவில்லை என்று வாட்சியார் அலுவலகம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று எண்ணிய திமுகவுக்கு பெரும் அடியாக மாறியுள்ளது.