தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை குறித்து இன்று அவதூராகவும் சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறினாலும் அன்றிலிருந்து சனாதனத்தின் வேர் ஆழமாகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறி பல சட்ட வழக்குகளை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது இந்து சமயத்திடம் அதிக வெறுப்புணர்வையும் பெற்றுள்ளார். இதனால் யாராலும் யார் என்ன நினைத்தாலும் சனாதனத்தை ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏன் வெளிநாட்டில் கூட தற்போது சனாதனம் அதிக அளவில் பேசப்படுகிறது, இந்த நிலையில் சமூக வலைதளத்தில் கேரள மாநிலம் குருவாயூரில் ஒரு யானையின் பக்தி குறித்த வீடியோ வைரல் ஆகி வந்தது. கேரள மாநில அரசர் ஒருவர் தன்னுடைய பங்களா மிகவும் பத்திரமாக இருந்தால் ஒரு யானையை கோவிலுக்கு கொடுப்பதாக வேண்டிக் கொண்டார் அதன்படியே 1913 இல் பிறந்த கேசவன் யானையை 1923 குருவாயூரப்பன் கோவிலுக்கு வழங்குகிறார்.
அந்த யானை ஏகாதசி என்றால் அன்று முழுவதும் சாப்பிடவே சாப்பிடாதாம்! எப்படி அந்த யானைக்கு ஏகாதசி என தெரியும் என்ற ஒரு வினா வரலாம் இந்த கோவிலில் சேர்ந்த காலத்தில் இவ்வளவு புத்திசாலியாக இந்த யானை இருந்ததில்லை அதற்கு பிறகு குருவாயூரப்பரின் வெண்ணையை சாப்பிட்டு தான் கேசவ யானை பெரிய அதிபுத்திசாலியாக மாறியதாக கூறிக்கின்றனர். மேலும் குருவாயூரப்பனின் விழா காலங்களில் எந்த யானை குருவாயூரப்பரை சுமந்து கொண்டு செல்வது என்பதை நிர்ணயிப்பதற்காக அக்கோவிலில் உள்ள அனைத்து யானைகளுக்கும் பந்தயத்தை வைப்பார்களாம் அந்த பந்தயத்தில் எந்த யானை முதலில் வருகிறதோ அதுவே குருவாயூரப்பரை இந்த விழாவில் சுமந்து செல்லும் என்பது கோவில் நிர்வாகம் எடுத்த முடிவு!
அதன்படி, கேசவன் யானையை வந்த பிறகும் இந்த போட்டி வைக்கப்பட்டுள்ளது அப்போட்டியில் இந்த யானையை வென்றுள்ளது, இப்போட்டி மட்டுமல்ல இதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் நடந்த அடுத்தடுத்த போட்டிகளிலும் கேசவ யானையை வென்று குருவாயூரப்பரை சுமந்து சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் யானை தனது வயது முறிவு எட்டும் பொழுது இந்த ஓட்டப்பந்தய போட்டியில் இரண்டாவதாக வர குருவாயூரப்புரை தூக்கும் வாய்ப்பு வேறு ஒரு யாணைக்கு கிடைத்தவுடன் எப்படி இவ்வளவு நாள் குருவாயூரப்பரை சுமந்து வந்த கேசவ யானையை மற்றொரு யானைக்கு பின் நடந்து வர வைப்பது என்று கோவிலுக்கு பின்னால் இந்த யானையை கட்டி வைத்து விடுகின்றனர். இருப்பினும் குருவாரப்பரை வேறு ஒரு யானை சுமக்க போகிறது என்பதை தெரிந்தவுடன் கேசவ யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு வேக வேகமாக ஓடி வந்து குருவாயூரப்பாறை தூக்கும்படி தனது கழுத்தை சாய்த்து உள்ளது! இதற்கு அடுத்த வருடம் 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று கேசவ யானையை கட்டி வைத்து விட்டு வருகின்றனர் இருப்பினும் அங்கிருந்தும் வேகமாக ஓடிவந்து குருவாயூரப்பரை தன்மீது ஏற்றும்படி தன் கழுத்தை காட்டி உள்ளது இந்த கேசவயானை!
என்ன இப்படி நடக்கிறது என்று தேவப்பிரசன்னம் ஒன்றைக் கோவில் நிர்வாகம் பார்க்கும் பொழுது கேசவ யானை உயிருடன் இருக்கும் வரை குருவாயூரப்பரை கேசவனே தூக்க வேண்டும் அவனே தான் தூக்குவான் என்று கூறப்பட்டுள்ளது! 1976 தன் உயிரை விடுவதற்கு முன்பு கூட இறக்கும் தருவாயிலும் குருவாயூரப்பரை கவனமாக சுமந்து சென்று நல்லபடியாக அந்த விழாவில் நடத்தி முடித்தது! இறக்கும் பொழுது கூட குருவாயூரப்பரை வணங்குவது போன்ற ஒரு அமைப்பில் படுத்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவ்வளவு அதிசயங்களை செய்த இந்த யானையை மறக்க முடியாமல் இதற்காகவே இதன் உருவ சிலையையும் செய்து வைத்துள்ளனர். மேலும் குருவாயூரப்பன் கோவிலில் கேசவ யானையின் தந்தம் மற்றும் புகைப்படத்தையும் பொருத்தி உள்ளனர்.