24 special

உதயநிதியை கைது செய்யும் காவலர்..? வெளியான அதிர்ச்சி தகவல்!

Stalin, Udhayanidhi
Stalin, Udhayanidhi

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராகவும், பின்னர் பிரபல நடிகராகவும் வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவில் தீவிரமாக இயங்க ஆரம்பித்த உதயநிதி, 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டார். அத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றியது. தற்போது அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அடுத்த வாரம் துணை முதலமைச்சராக அறிவிக்கலாம் என திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்போது உதயநிதி கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.


திரையுலகில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி அரசியலில் வரமாட்டேன் என சொன்னதும் எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார். அதன் பின் அமைச்சராக பொறுப்பேற்று விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குடும்ப அரசியலில் அடுத்தது உதயநிதி தான் என பேச்சுக்கள் எழுந்தது. ஆனால், உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபொழுது இல்லை நான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவில்லை என கூறினார். இந்த கருத்துக்கு பலரும் திமுகவில் உள்ளவர்கள் பதவி வேண்டாம் என்று சொன்னால் பதவி கொடுங்கள் என்று சொல்வதாக அர்த்தம்.

இப்படி இருக்கையில் முதலமைச்சர் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டு வருவதன் பின்னணியில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் ஓய்வு வேண்டியும் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தவுடன் ஸ்டாலின் வரும் 28ம் தேதி முதல் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மெட்டும் அமெரிக்க போன்ற நாடுகள் செல்வதாக அறிவித்துள்ளார். ஆனால் , இந்த பயணம் முதலீட்டாளர்களை ஒப்பந்தம் ஏற்படுத்த என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தனர். அரசியல் விமர்சகர்களோ வெளிநாடு செல்வது தனது உடல்நல பிரச்சனை குறித்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பயணம் தொடங்கியுள்ளனர் என தகவல் கூறுகின்றனர்.

வெளிநாடு செல்வதற்குள் சேலத்தில் வரும் 21ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதம் முதல் இந்த மாநாடு ஒத்திவைத்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் துணி முதலமைச்சராக அறிக்வ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். முடி சூட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக அதிமுகவில் சசிகலா முதலமைச்சராக  பொறுப்பேற்கும் முந்திய நாட்களில் அவரை கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர். அதே போல் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்கு உள்ளது. அது தொடர்பாக கைது செய்யப்படலாம் என தகவல் வந்துள்ளது. இதனை காரணமாகவே கடந்த வாரம் பிரதமரை உதயநிதி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் என்ன திருப்பம் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.