தமிழகத்தில் சினிமாவில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் படம் வெளியாகி திரைக்கு அழைப்பது தொடர்கதையாக வைத்துள்ளனர். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று புதிய படங்கள் வெளியானாலும் ரஜினி, விஜய், அஜித் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதும் திரைக்கு வராமல் இருப்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் அந்த படத்தின் ஷூட்டிங் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு போட்டோ கூட வெளியாகவில்லை. எந்த ஒரு நடிகர்களும் தான் நடிக்கும் படத்தில் உள்ள கெட்டப்பை பொது வெளியில் காட்டாமல் இருந்து வருகின்றார். அந்த வகையில் விஜயும் எந்த படத்திற்கும் தன்னை வெளியில் காட்டாமல் இருப்பது தொடர்ந்து வந்தார். ஆனால், எப்போது அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்தாரோ அதிலிருந்து விஜய் பொதுவெளியில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை பரிசாக ரசிகர்களை தொடர்ந்து இரு தினங்களாக நடிகர் விஜய் க்ளீன் ஷேவ் லுக்கில் மீசை இல்லாமல் மகன் விஜய் கெட்டப்பில் சந்தித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், பாண்டிச்சேரியில் வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் நம்ம ஊருக்கு படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததும் ரசிகர்கள் ஓடோடி வந்து அவரை பார்க்க வந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் வருவதை அறிந்து கொண்டு மின்னல் வேகத்தில் நடந்து கேரவனுக்குள் சென்ற ரஜினிகாந்த். கேரவனுக்குள் செல்வதற்கு முன்னதாக வேட்டையன் லுக்கில் ரசிகர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அது அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போய்விட்டது.
ஒருபக்கம் அஜித் சத்தமே இல்லாமல் விடாமுயற்சி படம் வெளிநாடுகளில் நடித்து வருகிறார். இதுவரை அந்த படம் தொடர்பாக எந்த வித அப்டேட்டும் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை, இதற்கு அடுத்தபடியாக சூர்யா கான்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு நடிகர்களின் அப்டேட் வரக்கூடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இப்படி முன்னணி நடிகர்கள் படம் வெளியாகாத போதும் இப்படி மக்களை சந்தித்ததே போதும் என்ற வகையில் விஜய் மற்றும் ரஜினியின் இந்த சந்திப்பு சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த தரிசனமே போதும் என ரசிங்கர்கள் நெகிழ்ச்சி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.