24 special

அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன்- அண்ணாமலை வருத்தம்!....கலங்கும் நெட்டிசன்கள்!

Vijayakanth, Annamalai
Vijayakanth, Annamalai

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஒருவாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்த் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையினால் தொண்டர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். மேலும் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 


தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து அரசியலில் கால் பதித்தவர் வரிசையில் விஜயகாந்த் ஒருவர் ஆவார். தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் எம்ஜிஆர்க்கு பிறகு அரசியலுக்கு வந்து தனது பலத்தை நிரூபித்தவர் விஜயகாந்த் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக அவரின் கட்சி சார்பாக பொதுமேடையில் பேசுவது, பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். நாளடைவில் அவரால் பேச முடியாமலும் மற்றவர்கள் உதவியின்றி எந்த செயலும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது ஆதரவும் குறைய தொடங்கியது நடந்து முடிந்த தேர்தலில் சோபிக்க முடியாத நிலைமை வந்தது.

இந்நிலையில் நவம்பர் 18ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் இன்று மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லை என தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் இதன் காரணமாக இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக தொடந்தர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக தளத்தில் தெரிவித்திருப்பது " தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்''. என வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது போல் அரசியல் கட்சி தலைவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனிடையே #Vijayakanth என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. இதில் மீண்டு வாருங்கள் கேப்டன் எனவும், விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.