24 special

இந்தியா முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரம்....தமிழகத்தில் என்ன நிலைமை தெரியுமா?

China virus, CM Stalin
China virus, CM Stalin

கொரோனா பெருந்தொற்று நோய் சீனாவில் தொடங்கி அதன் தாக்கம் தமிழகத்தில் 2020ம் ஆண்டு ஆரம்பமானது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா போன்ற முன்னணி நாடுகளில் பொருளாதாரம் குறைந்தது. இதில் மீண்டு வர மூன்று வருடம் ஆனது. இந்நிலையில் சினாவில் புதிய வகை நோய் பரவுவதால் இந்தியாவில் உள்ள பல மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


சீனாவில் கொரோனா 2019ம் ஆண்டு பரவி வந்ததால், அங்குள்ள தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. அதன் காரணமாக உற்பத்தி பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வது தடை ஏற்பட்டதால் பொருளாதார வணிகம் சரிந்தது. மேலும் இந்தியாவில் சுமார் மூன்று ஆண்டுகளாக பள்ளிகள் மூடல் நிலைமை ஏற்பட்டது. பத்தாயிரத்திற்கும் மேல் இந்த நோயில் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த நிலைமையில் இருந்து மக்கள் வெளியில் வந்து சுமுகமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் மீண்டும் சீனாவில் பெருந் தொற்று நோய் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில், சுவாச நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இது கொரோனா தொற்றின் போது ஏற்பட்டது போல், மீண்டும் பிற நாடுகளுக்கும் பரவலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக உலகளாவிய வினியோகத் தொடரையும், வர்த்தகத்தையும் பாதிக்கலாம் என்பதால், நிலைமையை எச்சரிக்கையுடன் உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில். " அந்த கடிதத்தில், சீனாவில் பரவி வரும் இன்ப்ளூயன்சா போன்ற உடல்நலக்குறைபாடு மற்றும் சுவாச தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளிடம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுள்ளது எனவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். சுவாச பிரச்னைகளுக்கு பதிப்பவர்களை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட மற்றும் மாநில கண்காணிப்பு குழுக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' எனக்கூறப்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத் , ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து எந்த வித செயல்களும் அமைக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்து வருகிறது. மாவட்ட வாரியாக மருத்துவ முகாம் அமைத்தல், மருத்துவமனைகளில் சரியான மருந்துகள் போன்ற பணிகளில் தமிழக அரசு முழுமையாக மேற்கொள்ளவில்லை என அரசியல் தலைவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் முகாம்களை அதிக அளவில் நடத்தி டெங்கு போன்ற விஷ காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.