24 special

மூன்று நாட்களில் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம்....கூடாரம் மொத்தமும் காலியாமே?

Stalin, Edappadi Palanisamy
Stalin, Edappadi Palanisamy

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் குறுகிய மாதமே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் திமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் அதற்கான பொறுப்பாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அடுத்த மாதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தெலுங்கானாவில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த ஐந்து மாநில தேர்வு முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்த முடிவுகளை பொறுத்தே மற்ற மாநிலத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட கூடும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இது வரை கூட்டணியில் எந்த கட்சியில் யாருடன் தேர்தலை சந்திக்கபோறோம் என்று எந்த கட்சிகளும் முடிவு எடுக்காமல் நேரம் வரும்பொழுது அறிவிப்போம் என இந்த மாநில தேர்தலை உற்று நோக்கி வருகிறது.

சமீப நாட்களாக முக்கிய அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அமைச்சர்களை தொடர்ந்து வணிக நிறுவன அதிபர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறது. இவர்களை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி வருகிறது அமல்காத்துறை. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலே அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேச ஒதுங்கி சென்கின்றனர் எதாவது பேசினால் அடுத்தது நமது வீட்டிற்கு ஐடி வந்துவிடுமோ என்ற பயத்தில் செல்கிறார்களாம். இதற்கிடையில் இப்போது வரை அமலாக்கத்துறைஇடம் உள்ள ஆவணங்களை வைத்து தேர்தல் நெருங்குவதற்குள் திமுகவில் உள்ள பெரிய தலையை கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

5 மாநில தேர்தல்களில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தமிழகத்தில் இருக்க கூடிய திமுக கட்சிக்கு பெரிய அளவில் நெருக்கடி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின் தமிழ்நாட்டில் கூட்டணியில் இருக்கும் திமுகவிடம் குறைந்த பட்ச்சம் 20 தொகுதிகளை கேட்க்கும், இப்போது  காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் 20 சீட்டுகளை கேட்க போவதாக தெரிவித்தார். இருந்தாலும் திமுக 8 சீட்டுகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிவு எடுத்துள்ளதாம். ஒரு வேலை காகிரேஷ் கட்சி அந்தச் 5 மாநிலத்தில் ஆட்சி அமைத்த பின் திமுக இரங்கி வரவில்லை என்றால் கூட்டணியில் பிளவு ஏற்படவும் என்பது போல் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கு மாறாக பாஜக ஐந்து மாநிலத்தில் வெற்றி பெற்றால் மீண்டும் தமிழ்கத்தில் உள்ள அதிமுக கட்சிக்கு சரியான ஆட்டம் காணும் என்றும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் தனித்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தது. இதனால் பாஜக அமலாக்கத்துறையை அதிமுக பக்கம் திருப்பி விடலாம் என கூறப்படுகிறது. இதனால் ஐந்து மணிலா தேர்தல்களை பொறுத்தே அடுத்த மாதம் திமுக, அதிமுக கட்சிக்கு பெரிய நெருக்கடி சூழ்ந்து வரக்கூடும் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.