சூது கவ்வும் படம் மூலமா திரையிலகில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன், அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் முக்கிய வேடத்தில் நடித்தார் அசோக் செல்வன். அதன் பிறகு தெகிடி போன்ற படத்தில் ஹீரோ கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அசோக் செல்வன் பெயர் எல்லா இடத்திலும் புகழ் பெற காரணம் போர் தொழில் படத்தில் சரத்குமார் உடன் நடித்ததே ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் அசோக் செல்வன் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் குறித்து அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் அசோக் செல்வனுக்கு சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இவரது நடடிப்பில் வெளியான போர் தொழில் படம் பட்டி தொட்டி எங்கும் பரவியது அந்த படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கூட போர் தொழில் திரையிடப்பட்டது. போலீஸ் கெட்டப்பில் அசோக் செல்வன் மிரட்டியிருப்பார். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் தான் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெற்றது. நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அசோக் செல்வன். இவருக்கு திரை துறையை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில், பயில்வான் ரங்கநாதன் கீர்த்தி பாண்டியன் வச்சி செய்திருந்தார். "வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா, ஒரே தேதியில் உங்கள் படங்களை ரிலீஸ் செய்து அங்கேயும் சண்டையா என பயில்வான் ரங்கநாதன் நக்கலாக கேட்டிருந்தார். அதனால் காட்டமான கீர்த்தி பாண்டியன், எங்களுக்குள்ள எப்போ சண்டை வந்தது, என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தியா என பயில்வான் ரங்கநாதனை சம்பவ இடத்திலேயே வெளுத்தி வாங்கியிருந்தார் கீர்த்தி பாண்டியன். கடந்தவாரம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக இருந்த படம் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியானபடத்தால் சபாநாயகன் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.
இந்நிலையில் கடந்த வாரம் கீர்த்தி பாண்டியனிடம் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என கேட்டதற்கு திருமணம் ஆக்கினாள் நடிக கூடாதா என்பது போல் கூறியிருந்தார். இன்று அசோக் செல்வன் நடிப்பில் சபாநாயகன் படம் வெளியாகிள்ளது. இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் நடித்த பலரும் தங்களது கருத்துகளை கூறினர். அப்போது நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என கீர்த்தி பாண்டியன் பேசியிருந்தது குறித்து அசோக் செல்வனிடம் கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதிலளித்த அசோக் செல்வன் 'கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை'. கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து நடிப்பதில் எனக்கும் பிரச்சினை இல்லை என ஓபனாக பேசியிருந்தார்.
ஒரு நடிகரின் திருமண வாழ்கை முடிந்து நன்றாக செல்லும்போது தான் இப்படி கொளுத்தி போடும் வேலைகள் சிலர் செய்வார்கள் அதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, நீங்கள் பயணத்தி தொடங்குகள் என அசோக் செவனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் வீட்டிலும் சண்டை திரையிலும் சண்டையா என கேட்டது குறிப்பிடத்தக்கது.