தமிழகத்தில் சமீப காலமாக 150க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதாக இந்து அமைப்பினரும் பாஜக ஆதரவாளர்களும் பெரும் குற்றத்தையும் ஆதாரத்தையும் முன் வைத்து கருத்தை பதிவிட்டு வருகின்றனர். திமுக பொறுப்பேற்று 8 மாதத்தில் இப்படி எல்லாம் செய்கிறது என பெரும் கண்டனக்குரல் எழுப்பினர். இப்படி ஒரு நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சாலையான காமராஜர் சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்ட பெரியார் சிலையை அப்பக்கமாக வந்த லாரி ஒன்று இடித்து சிலை முழுவதுமாக கீழே விழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் என்ற பகுதியில் இயங்கி வரக்கூடிய தொழிற்சாலை ஒன்றிலிருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட லாரி மகாராஷ்டிரா செல்ல இருந்தது ஆனால் லாரி டிரைவர் கூகுள் மேப் போட்டு வண்டியை இயக்கியுள்ளார். அப்போது காமராஜர் சாலை வழியாக வந்துள்ளது. பின்பு மாறி மாறி வழியை காண்பித்ததால் குழப்பம் அடைந்த டிரைவர் லாரியை திருப்ப முயற்சி செய்துள்ளார். அப்போதுதான் அங்கிருந்த பெரியார் சிலை மீது தவறுதலாக இடித்ததில் சிலை சரிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு பணியை செய்தனர். அதன்பின்பு இதுகுறித்து விசாரணை நடத்த, வண்டியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று டிரைவர் மச்சேந்திர ஸ்பலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதற்குள் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றுள்ளனர் என நடந்த விவரத்தை டிரைவர் முழுமையாக காவல் துறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறவே சிலையை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால் இது தமிழக அரசியலில் பேசும்பொருளாக மாறியுள்ளது. உதாரணத்திற்கு, "கர்மா சும்மா விடாது எல்லா கோயில்களையும் இடித்தீங்க பதிலுக்கு இயற்கை அவங்க போற்றி வணங்குகின்ற சிலையை இடித்து தள்ளி இருக்கு" என இந்து ஆதரவாளரான ஜெயம் எஸ் கே கோபி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதேபோன்று நெட்டிசன்கள் பலரும் எதிர்பாராமல் நடந்த விபத்தில் ஒரு பெரியார் சிலை விழுந்ததற்கு இவ்வளவு களேபரம் என்றால் எங்கள் உணர்வுகளை நோகடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து உள்ளீர்களே எங்களுக்கு எப்படி வலிக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.