24 special

விளையாட்டு துறை அமைச்சருக்கு பதிலடி கொடுத்த..... முன்னாள் கிரிக்கெட் வீரர்!

udhayanithi
udhayanithi

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆன போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறிவந்தது. இந்நிலையில் மைதானத்தில் தவறான நிலை நடந்ததாக கூறி ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்தது. இதற்கிடையில் ரசிகரின் நடத்தைக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.  இதனை குற்றம் என்று எண்ணி பாகிஸ்தான்  கிரிக்கெட் வாரியம் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாகிஸ்தான் புகார் குறித்து விமர்சனம் செய்து வந்தார். 


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், “பாகிஸ்தானின் பெஷாவரில் நாங்கள் போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டு இருந்தோம். அப்போது திடீரென ரசிகர் ஒருவர் ஆணியை என் மீது எறிந்தார். அது எனது கண்ணுக்கு கீழே பட்டது. அதை நாங்கள் பெரிது செய்யவில்லை. அவர்களது விருந்தோம்பலை பாராட்டி இருந்தோம். இந்தியாவில் பார்வையாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பிரச்சினையாக மாற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என பதான் தெரிவித்துள்ளார். 2004 மற்றும் 2006 என இரண்டு முறை பாகிஸ்தான் பயணித்து கிரிக்கெட் தொடரில் விளையாயடிய இந்திய அணியில் பதான் இடம் பெற்றிருந்தார்.

விளையாட்டிற்கு ரசிகர்கள் எப்பொழுதும் முதன்மையானவர்கள். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் சில மக்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக இதை தவறாக பரப்ப முயற்சி செய்கிறார்கள். எனவே கதை வேறு விதமாக செல்கிறது. அதனால் இதைக் கூற வேண்டி உள்ளது!” என்று ஆகாஷ் சோப்ராவுக்கு பதில் அளித்து இருக்கிறார்!.பாகிஸ்தான் கொடுத்த புகாரை ஐசிசி தீவிரமாக எடுத்து கொண்டாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பிசிசி மற்றும் ஐசிசி போர்டு வாரியத்தில் பணிபுரிந்தவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நபர் கூறுகையில், ஒழுங்கு நடவடிக்கை என்பது ஒருவர் மீது தான் எடுக்க முடியும் ஒரு கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது அப்படி எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிலானது புகார் தெரிவித்த பாகிஸ்தான் வாரியத்திற்கு மட்டும் கிடையாது, தமிழ்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட ஜெய் ஸ்ரீ ராம்மை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர் அனைவருக்கும் என்று விமர்சித்து வருகின்றனர். இவரின் இந்த கருத்தை பார்க்கும் போது ரசிகர்கள் அவரது மகிழ்ச்சியை தான் வெளிப்படுத்துகிறார்கள். இதனை கொண்டு ஒரு சில கும்பல் அரசியலை செய்வதாக கூறுவது, உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இர்பான் பதான் பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்ளிடம் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதாக உணர்கின்றனர்.