அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் செந்தில் பாலாஜிக்கு தலை தீபாவளி சிறையில் தான் என்று மீம்ஸ் போட்டு தள்ளுகின்றனர். அவர் வெளிய வரவேண்டும் என்றால் முதலைமச்சருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை டிப்ஸ் கொடுத்துள்ளார். திமுக முக்கிய நிர்வாகிகள் தற்போது நிலைமை, சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று நினைத்து வருகின்றனர் காரணம் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சிறையில் இருந்தாலும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.அதிமுகவில் கம்பிரமாக இருந்த நான் திமுகவிற்கு வந்ததும் சிறைக்கும், மருத்துவமனைக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்து வருகிறேன். புழல் சிறையில் இருக்கும் அவர் இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் கால் வலியும் இருப்பதாக கூறி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியில் வரவேண்டி ஜாமின் மனு முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் உடல் நலக்குறைவு காரணமாக ஜாமின் வேண்டும் என்று கோரியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமின் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
இதற்கிடையில் நீதி மன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலயில், புழல் சிறையில் இருந்து காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன் ஆஜரானார். நீதிபதி அல்லியம் செந்தில் பாலாஜியின் மனுவை விசாரித்து 9வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து நீதிமன்றக் காவலை நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் இருப்பது பற்றி கருத்து கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அவர் தமிழக அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, அப்போதுதான் அவருக்கு ஜாமின் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த டிப்ஸை முதல்வர் ஏற்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இந்த தீர்ப்பை அடுத்து நெட்டிசன்கள் போற போக்கை பார்த்தால் செந்தில் பாலாஜி தீபாவளி சிறையில் தான் கொண்ட போறார் என்ற கருத்தை முன் வைத்து வருகின்றனர். மேலும் வடிவேல் போல் திமுகவினர் எவ்வளவு முயற்சித்தும், ஜாமின் கடல்லே இல்லை என்பது போல் சுத்தி வருகிறார்களாம் என்று நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.