24 special

அண்ணாமலை வீட்டின் முன்பு நள்ளிரவில் பாஜகவினர் கூண்டோடு கைது....வெளியானது திடுக்கிடும் தகவல்!

annamalai
annamalai

சென்னை அருகே உள்ள பனையூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு முன் பாஜக நிர்வாகிகள் சுமார் 50 அடி  உயரமுள்ள பாஜகவின் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியானது இன்று நடைபெறவிருந்தது.தமிழநாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சியை நோக்கி வருகிறது. இதனால் பாஜகவினர் அண்ணாமலை வீட்டின் முன்புறம் பாஜகவின் கொடிக்கம்பத்தை ஏற்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். இந்த நிலையில் கொடி கம்பத்தை அகற்ற கோரி இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதியில் பாஜக கொடி கம்பத்தை ஏற்ற விடமாட்டோம் என்று முற்றுகையிட்டனர்.


இதனை அறிந்த பாஜக நிர்வாகிகள் ஒன்று திரண்டு அண்ணாமலை வீட்டின் முன்பு குவிந்தனர். இரு தரப்பும் ஒன்றாக கூறி விட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்ப்பட்டது.சமூகத்தை சீர்குலைக்கும் வகையில் பாஜகவினர் அந்த அப்பகுதியில் கொடி கம்பத்தை நிறுவியுள்ளனர் அதனை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பிறகு போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்தனர். பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பாஜகவினர் கொடி கம்பத்தை அகற்றுவதாக தெரிவிக்க வில்லை. இதனால் அப்பகுதிக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாஜகவினரிடம் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூகமான உடன்பாடுகளும் ஏற்படவில்லை. பிறகு, போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்களிடமும் பேச்சுவார்த்தையை காவல்துறை நடத்தியது. இந்த பகுதியில் கொடி  கம்பத்தை நிறுவ நெடுஞ்சாலையிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறினார். இதனையடுத்து போலீசார் பாஜகவினரிடம் பேசுகையில், சில திமுக நிர்வாகிகள் கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தங்களுடைய இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்திற்கு அருகில் பாஜக கொடி கம்பம் இருக்க கூடாது என்று அவர்களே ஜேசிபி கொண்டு வந்துவிட்டார்களாம். 

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் அங்கிருந்த காவலருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் பாஜக சமூக ஊடக பிரிவில் மாநில செயலாளர் விவின் பாஸ்கருக்கு காவல்துறை நடத்திய கைகலப்பில் மண்டை உடைந்தது. அவரை பாஜகவினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பாஜக நிர்வாகிகள் சுமார் 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் பனையூர் பகுதியில் இருக்கிற தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நாளிரவு முதல் தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றியது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினர் கட்சி கொடிக்கம்பத்தை நிறுவியதாக காவல்துறை ஆராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. பாஜக தலைவர் வீட்டின் முன்பு நிறுவிய கொடிக்கம்பத்துக்கு திமுக இதுபோன்ற பிரச்சனையை ஏற்படுத்திக்கிறது என்றால் கிராம புறங்களில் அவர்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திப்பார்கள் என்று எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.