சட்டமன்றத்தில்
பரபரப்பு..!
துண்டை
காணோம் துணியை காணோம் என்று எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தலைதெறிக்க ஓட்டம்..!
ஞாயிற்றுக்கிழமை நேற்று மும்பை மாநகரமே அமைதியாய் பொழுதை கழிக்க பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை மட்டும் கதிகலங்கிப் போயிருந்தது..ஆம் அந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவர்களின் இரவை நரகமாக்கியது.மந்த்ராலயா கட்டிடத்தில் நாங்கள் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு கதறவிட்டுவிட்டார்கள் "மர்மநபர்கள்".
அந்த மந்த்ராலயா பில்டிங் வேறெதுவும் அல்ல. அது தெற்கு மும்பை நரிமன்பாய்ண்ட்டில் உள்ள மகாராஷ்டிரா சட்டமன்ற கட்டிடம்..தகவலறிந்த காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களுடன் நரிமன்பாய்ண்ட்டுக்கு விரைந்துள்ளது..தற்போது மகாராஷ்டிரா சட்டமன்ற அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
காலையில் வழக்கம்போல சட்டமன்றத்திற்கு வந்த சில எம்எல்ஏக்கள் தலைதெறித்து ஓடியுள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி "தற்போது ஆளும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தினம் ஒரு ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சிக்கி வருகிறது.
இந்த விஷயங்களை மடைமாற்றும் முயற்சியாகவே இதை பார்க்கிறோம்" என தெரிவித்தார்.சுஷாந்த் சிங் ராஜ்புட் கொலை வழக்கு முதல் ரிலையன்ஸ் நிறுவனரின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு வரை சிவசேனா தனது கோரமுகத்தை காட்டிவருகிறது.. இந்த பேரிடர் காலத்தில் மக்கள் நலனையே கருத்தில் கொள்ளாமல் உத்தவ் தாக்கரே அரசு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.
....உங்கள் பீமா