நாடோடி நடிகை விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் போல சிக்கிய இன்னொரு அமைச்சர்....நாடோடி நடிகை விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் போல சிக்கிய இன்னொரு அமைச்சர்....
நாடோடி நடிகை விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் போல சிக்கிய இன்னொரு அமைச்சர்....

மகாராஷ்டிராவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் அனில் பரப்.
இவர்மீது ஆர்டிஓ  கஜேந்திர பட்டில் புகார் அளித்துள்ளார்.இவர் 2021 ஜனவரியில் லஞ்சம் வாங்கியதாக
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கஜேந்திர பட்டில் அளித்த புகாரில்"RTO அலுவலகத்தில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது. கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது.இடமாறுதலுக்கும் புதிய நியமனத்திற்க்கும் அமைச்சர் அனில் பரப்க்கு கோடிகணக்கில் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது.

போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோடியில் பணம் கொடுக்கவில்லை என்றால் பணிநியமனம் மற்றும் இடமாறுதல் எதுவும் நடைபெறாது.இந்த ஊழலில் அமைச்சர் அனில் பரவ் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார்.ஆகவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரை மே15 அன்று பஞ்ச்வதி காவல்நிலையத்திற்க்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். மேலும்  அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல்
யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியது என தகுந்த ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

இது குறித்து நாசிக் கமிஷனர் தீபக் பாண்டே குறிப்பிடுகையில் "மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று DCP இடம்பெறுவர்.DCP க்ரைம் திரு.சஞ்சய் பர்கன்ட் தலைமையில் இந்த குழு செயல்படும். இன்னும் ஐந்து தினங்களுக்குள் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்" என கூறினார்..

...உங்கள் பீமா
Share at :

Recent posts

View all posts

Reach out