24 special

"காதர் பாஷா முத்துராமலிங்கமா அல்லது கமிஷன் முத்துராமலிங்கமா" வைரலாகும் முகநூல் சுவரொட்டிகள்.!

Kader Pasha, Muthuramalingam
Kader Pasha, Muthuramalingam

நாட்டில் எந்த சம்பவம் நடந்தாலும் முதலில் இணையத்தில் வைரலாகவும் அதன் பின் சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தும் புது யுக்தியை கையில் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவின் உள்விவகாரம் பூசல் காரணமாக ஒட்டிய சுவரொட்டி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.ராமநாதபுரம் மாவட்ட திமுகவை பொறுத்தவரை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் தலைமையிலான ஒரு அணியும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலான ஒரு அணியும் கட்சி வேளைகளில் தீவிரமாக செய்து வருகிறார்கள். 


இவர்கள் இருவரும் திமுக கட்சிக்காக மாரி மாரி உழைத்து வந்தாலும், தீராத பகை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அரசு நிகழ்ச்சிகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரே மேடையில் இருவரும் அருகருகே நின்று புன்னகைத்தபடியே புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார்களாம். ஆனால், திரைமறைவில் ஒருவருக்கொருவர் மாறி மாறி முதுகில் குத்துவதும் காலை வாரி விடுவதும் போன்ற நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.

இதனால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் யார் பக்கம் நிற்பது, யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் பொதுவான நிர்வாகிகள் திண்டாடி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் போரானது ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பதவி கிடைத்த போதே பனிப்போர் ஆரம்பித்தது தற்போது வரை இது நீடித்து வருகிறது.  கடந்த மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்ட இருவரும் மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு இருந்ததாகவும் இது குறித்து அன்பில் மகேஷ்க்கு தெரிந்தும் அவர்களை ஒற்றுமை படுத்தும் வேளையில் செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியத்தில் மாணவர் அணி அமைப்பாளராக திமுகவில் பதவி வகிக்கும் T. பசுபதி என்ற கருப்பசாமி பாண்டியன் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திற்கு எதிராக 'காதர்பாட்சா முத்துராமலிங்கமா இல்லை கமிஷன் முத்துராமலிங்கமா கள ஆய்வு தேவை "இவன் கலைஞரின் முரட்டு பக்தன்" என குறிப்பிட்டு சுவரொட்டியாக ஒட்டப்பட்ட நிலையில் பாதர் பாச முத்துராமலிங்கம் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதால், சுவரொட்டிகளை புகைப்படங்களாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தற்போது மாவட்ட அரசியல் மட்டுமின்றி திமுக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் எல்லா ஊர்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இது தளபதியின் கண்களுக்கும் கட்சி தலைமையின் கண்களுக்கும் தெரிய வேண்டும் எனவே இவரைப் பற்றி உடனே கள ஆய்வு நடத்த வேண்டும் என ஒட்டியுள்ள சுவரொட்டிகளை புகைப்படமாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் திமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கருப்பசாமி பாண்டியன், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை திமுக மாவட்ட செயலாளர் அடியாட்களை ஏவி விட்டு தாக்கியதாக அழுதபடியே பேட்டியளித்த சம்பவம் கட்சி உடன்பிறப்புக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.