பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.இந்த சீசனில் வழக்கத்தை விட சுமாராகவே தினமும் போட்டி நடைபெற்று வருகிறது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் வனிதா மகள் ஜோவிகாவும், பிரதீப் இருவரும் சண்டை போட்டுக்கொள்வதும் தான் காணொளி விரலாய் வருகிறது.
மீதம் இருக்கும் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும் கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் இல்லையென்றால் இந்த சீசன் படுத்துக்கொள்ளும் என்று தான் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசனில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். முதல் போட்டியாளராக அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.அடுத்ததாக பாவா செல்லத்துரை போட்டியை விட்டு தானாக வெளியேறிவிட்டார். இதையடுத்து விஜய் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் முதல் இடத்துக்கு ஆசைப்பட்டு நிற்கும் பிரதீப் ஆண்டனி தான் ஏழ்மையானவன் என்றும் ஜோவிகா பயன்படுத்தும் செருப்பு முதல் மேக்கப் வரை அனைத்துமே காஸ்ட்லி என்றும் அதற்கு எதுக்கு முதல் இடம் என சண்டை போட்ட ப்ரோமோ வெளியான நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளுக்கு எதிராக பேசிய பிரதீப் ஆண்டனியை சோஷியல் மீடியாவில் கிழித்து தொங்க விட்டுள்ளார்.ஏற்கனவே பிரதீப் ஆண்டனியை தனது வீட்டு வேலைக்காரன் போல நினைத்து அதிகாரம் பண்ண ஜோவிகாவுக்கு எதிராக பலரும் கமெண்ட் போட்ட நிலையில், தற்போது ஜோவிகா பணக்காரி என்றும் தான் ஏழை என்றும் பிக் பாஸ் வீட்டில் கிடைக்கும் பணம் தனக்கு ரொம்ப முக்கியம் என்பதால் முதலிடத்தில் நிற்கிறேன் என பிரதீப் ஆண்டனி சண்டை போட்டுள்ளார்.
தனது மகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வனிதா எக்ஸ் தளத்தில், பிக் பாஸ் என்பது ஒரு சீப்பான கேம் என்றும் இதில் வரும் வருவாயை வைத்து படம் நடிப்பார் என்பதெல்லாம் சுத்த பொய். சினிமாவை பொறுத்தவரை நல்லா நடித்தால் போதும் வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்று கலாய்த்து உள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 ரொம்பவே போர் அடித்து வருவதாகவும் ஒரே டிராமாவாகவே ஷோ விஜய் டிவியின் இன்னொரு சீரியல் போல செல்வதால் ரசிகர்கள் யாருமே அதை கண்டுக்கவே இல்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த சீசனில் எதாவது ஒரு முன்னணி நடிகர் அல்லது ஒரு நடிகையை போட்டியாளராக தேர்ந்தெடுத்திருந்தால் டிஆர்பி அதிகரித்திருக்கும் என்றும் இந்த சீசனில் அப்படி யாரும் இல்லை அதனாலே இந்த சீசன் இவ்ளோ ரொம்ப சோதனையாக செல்வதாக கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது ரசிகர்களிடம் அதிக ஆதரவை பெரும் போட்டியாளராக பிரதீப் தான் இருந்து வருகின்றார். ஆனால் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வரும் போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு டஃப் கொடுப்பார்களா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.