24 special

ஆளுநர் மாளிகை விவகாரம்...! திருமாவளவனை வசமாக சிக்க வைத்த சீனியர் சிறுத்தை...!

thirumavalavan
thirumavalavan

சென்னையில் உள்ள கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தான் தற்பொழுது தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகை மீது ஒரு ரவுடி பெட்ரோல் குண்டு வீசியது இந்தியாவை தமிழ்நாட்டை நோக்கி திரும்பி பார்க்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பும், அரசு தரப்பும் மாறி மாறி விளக்கங்கள் அளித்துள்ளன. அரசு தரப்பில் விளக்கங்கள் அளித்ததை ஆளுநர் மாளிகை ஏற்கவில்லை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசு தரப்பில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் பிடிபட்டார் என கூறும்போது, ஆளுநர் மாளிகை கூறுவது என்னவென்றால் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தப்பிவிட்டனர் எனக் கூறுகிறது. இப்படி பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் அடுத்து என்ன நடக்குமோ என அரசியல் உலகமே எதிர்பார்த்து வருகின்ற நிலையில் இது குறித்து பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் திருமாவளவன் இது குறித்து இதுவரை பேட்டியோ எதுவும் பெரிய அளவில் கூறாமல் இருக்கும் பொழுது திருமாவளவனை இந்த விவகாரத்தில் சிக்க வைக்கும் விதமாக வன்னியரசு வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வன்னியரசு அவரது அறிக்கையில் 'சட்டம் ஒழுங்கை மதிக்காமல் பொது அமைதியை சீர்குலைத்து வரும் சமூக விரோதியை எப்படி ரவுடி என அழைக்கிறோமோ, அது போல தான் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஆளுநர் போன்றோரை ரௌடி என அழைப்பதா? தேச விரோதி என அழைப்பதா? என்பதை ஆளுநர் மாளிகையே முடிவு செய்ய வேண்டும். இச்சூழலில் கருக்கா வினோத் எனும் ஆளுநர் ரவுடி ஆளுநர் மாளிகை மீது வெடிகுண்டு வீசியதாக காவல்துறை கைது செய்துள்ளது.

இதே ரவுடி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி என்று பாஜக தலைமை அலுவலக வாசலில் வெடி குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டார், இப்போது ஆளுநர் மாளிகை மீது வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள அதே ரவுடிதான் கமலாலயத்தில் நடந்த சம்பவத்திற்கும் காரணம்..!சமீபகாலமாக பாஜகவினரும், ஆளுநரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவதை கவனிக்கலாம்! அதன் தொடர்ச்சியாக தான் இது மாதிரியான ரௌடிகளை பயன்படுத்துகிறார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் குறிப்பாக சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்றி ஆட்சி நடத்திவரும் திமுக ஆட்சியை கலைக்க அச்சுறுத்துகிறார்களோ என சந்தேகமும் எழுந்துள்ளது, ஆகவே தமிழ்நாடு காவல்துறை இதே கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த வெடிகுண்டு வழக்கில் ஆளுநராக பணி செய்ய வந்துள்ளவரை விசாரித்தால் தான் உண்மை முழுமை பெறும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஆளுநர் மாளிகை குண்டுவெடிப்பு விவகாரத்தில் கொதித்துப் போய் இருக்க இப்படி வன்னி அரசு தேவையில்லாமல் ஆளுநரை விசாரிக்க வேண்டும் எனவும், ரவுடி என்னும் வகையிலும் தேச துரோகி என்னும் வகையிலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. 

இது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் தற்பொழுது இந்த வெடிகுண்டு விவகாரத்திலும் திருமாவளவனே பேசாமல் அமைதியாக இருக்கும் பொழுது வன்னியரசு முந்திக்கொண்டு அறிக்கை விடுத்தது திருமாவளவனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. வான்டடாக ஆளுநர் மாளிகை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அறிக்கை கொடுத்து திருமாவளவனை சிக்க வைத்து விட்டார் வன்னியரசு என விமர்சனங்கள் எழுந்துள்ளது.