முதியோர் உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அரசு வழங்கி வந்ததை திமுக அரசு அமைந்தவுடன் நிறுத்திவிட்டு தற்பொழுது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை எப்படி கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது!
தமிழ்நாட்டில் வயது முதிந்தவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது, வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1962 ஆண்டு முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை ஒய்வு துறை துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி படிப்படியாக உயர்த்தி, தற்போது மாதம் ரூ.1,000/-வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவி தொகையானது திமுக அரசு அமைந்ததிலிருந்து சரிவர கொடுக்கப்படவில்லை மேலும் இந்த உதவி தொகையை தமிழக அரசின் நிதி நிலையை காரணம் காண்பித்து நிதி அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிறுத்தி உள்ளார்.
இதனை கண்டித்து கடந்த பிப்ரவரி 15ம் தேதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. முதியோர்கள், கணவனை இழந்தோர் திமுக அரசு நிறுத்திய உதவித்தொகையை வழங்க வேண்டும் என கோஷமிட்டபடி போராட்டம் செய்தனர்.
ஆனால் திமுக தேர்தல் சமயத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையிலேயே முதியோர் ஓய்வூதியத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள், இதனை எதிர்பார்த்து வாக்களித்தவர்கள் ஏமாந்தது தான் மிச்சம். திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்தது ஏழை எளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
உதவித்தொகை வாங்கும் முதியவர்களுக்கு நிபந்தனை என்ற பெயரில் மகனுக்கோ சொத்து தானம் கொடுத்திருந்தால் கிடையாது! குடும்பத்தில் இரு சிலிண்டர்கள் வைத்திருந்தால் கிடையாது! குடும்பத்தில் மகன் இருந்து வேலைக்கு சென்றால் கிடையாது! குடும்பத்தில் யாரேனும் அரசு பொறுப்பில் இருந்தால் கிடையாது என இப்படி பல நிபந்தனைகளை அறிவித்து மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கி வந்த முதியோர்களின் பென்ஷன் தொகையை நிறுத்தியது திமுக அரசு!
இதனால் முதியோர்கள் தாலுகா அலுவலகத்திற்கும், இ-சேவை மையத்திற்கும் நடந்து என்ன ஆயிற்று இந்த தொகை எல்லாம் என விசாரித்து வருகின்றனர். முதியோர் உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை நிறுத்திவிட்டு குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என போலி வாக்குறுதியை கூறி வருகிறது திமுக அரசு என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்றால் பெரிய தொகை தேவைப்படும் இந்த தொகையானது அரசு ஏற்கனவே இருக்கும் நிதி நிலையில் வாய்ப்பே இல்லை அப்படி இருக்கையில் ஏற்கனவே கொடுத்த முதியோர் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிறுத்திவிட்டு தற்பொழுது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உரிமைத் தொகை கொடுப்போம் என கூறுவது திமுக அரசின் பித்தலாட்டம், இந்த பித்தலாட்டத்தை தான் திமுக அரசு திராவிட மாடல் என்ற பெயரில் செய்கிறது, நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி மிச்சம் செய்கிறேன் மிச்சம் செய்கிறேன் என்ற பெயரில் மக்கள் திட்டத்தில் கை வைத்துள்ளார்! இந்த நிலையில் உதவித்தொகை பெற்றுவந்த முதியோர்களை தவிக்க விட்டு விட்டு குடும்பத்தலைவிகளுக்கு திமுக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை எப்படி கொடுக்கும் என கேள்வி எழுந்துள்ளது!