24 special

அவங்க உழைக்க தான வந்தாங்க, உன்ன மாதிரி திருட்டு ரயில் ஏறியா வந்தாங்க?' - கலகம் ஏற்படுத்திய கஸ்தூரி கமெண்ட்!

Kasthuri
Kasthuri

அவங்க எல்லாம் உழைக்க தான வந்தாங்க, உன்ன மாதிரி திருட்டு ரயில் ஏறியா வந்தாங்க?' என்கிற ரீதியில் நடிகை கஸ்தூரி கூறிய கமெண்ட் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் வட மாநில தொழிலாளர்களின் விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது, வட மாநில தொழிலாளர்களுக்காக யாரோ ஒருவர் பதிவிட்ட சமூக வலைதள பதிவை கருத்தில் கொண்டு வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படுகின்றனர், அவர்களுக்கு தமிழர்களால் ஆபத்து என்பதையும் அவதூறு கருத்து பதிவு சமூக வலைதளத்தில் கூறினார்கள், மேலும் அடுத்த வாரம் ஹோலி பண்டிகைக்காக ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநிலத்தில் தொழிலாளர்களின் புகைப்படத்தையும் பகிர்ந்து தமிழர்கள் தாக்கப்படும் காரணத்தினால் வட மாநில தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள் என்ற ரீதியில் சமூக வலைதளத்தில் கருத்து கூறி வந்த காரணத்தினால் காவல்துறை தலையிடும் அளவிற்கு போனது விவகாரம். 

மேலும் பீகார் மற்றும் தமிழக மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பேசும் அளவிற்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாஜக'தான் காரணம் என திமுக தரப்பில் கூறப்பட்டது, திமுக அமைச்சர் பொன்முடி பானி பூரி விற்கும் இந்தியர்கள் என கிண்டல் செய்ததை குறிப்பிட்டு திமுக பரப்பிய அவதூறை காரணம் காட்டி பாஜக தரப்பில் கூறப்பட்டது. இப்படி தமிழக களத்தை வட மாநில தொழிலார்கள் விவகாரம் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ரீதியாக ஒவ்வொரு கட்சியினரும் இது எங்களின் தவறல்ல இது உங்களின் தவறுதான், ஏற்கனவே நீங்கள் இப்படி கூறியிருக்கிறீர்கள் என அரசியல் ரீதியாக மற்ற கட்சியினர் மீது பழி போடும் விவகாரமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து செய்த ட்விட்டர் பதிவு ஒன்று பரபரப்பாகியுள்ளது. 

அதில் கஸ்தூரி கூறி இருப்பதாவது, 'வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை'' என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

இப்படி வடமாநில தொழிலாளர்கள் உழைத்து தான் பிழைக்க வந்தார்கள் அவர்களைப் உங்களை போல் திருட்டு ரயில் ஏறியா வந்தார்கள் எனக் கூறியது யாரையோ அரசியல் ரீதியாக குத்தி காட்டுவது போல் அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பரவி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சில கட்சிகளின் ஆதரவாளர்கள் நடிகை கஸ்தூரியின் பதிவிற்கு சென்று அதிகமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.