24 special

பாஜகவில் சிவா மகன் திருச்சி சூர்யா இணைந்தது குறித்து பிரபல எழுத்தாளர் கருத்து..!

Trichy surya, bjp
Trichy surya, bjp

திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இணைந்த அரசியல் பின்னணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் எழுத்தாளர் சுந்தர் ராஜா சோழன். இது குறித்து அவர் தெரிவித்த தகவல் பின்வருமாறு :


வளர்ந்து வரும் கட்சியில் நிறைய பேர் இணைவார்கள்,இது இன்று நேற்றல்ல காலந்தோறும் நடந்தது,இனியும் நடக்கும்.இதே போலதான் திருச்சி சிவா மகன் சூர்யாவும் பாஜகவில் இணைந்துள்ளார்..இது பெரிய வாக்குகளை கொண்டு வந்துவிடாது என்பது தனி.

நான் ஏன் திமுகவை விட்டு வெளியேறுகிறேன் என்றும், திமுக மீது சூர்யா சொல்லும் குற்றச்சாட்டும் மிகப் பெரியது..திமுக அதிதீவிர கோஷ்டி பூசலில் வந்து நிற்கிறது என்று அவருடைய வாயிலாக பொதுவெளிக்கு வந்துள்ளது.

அரசியல் எப்படிப்பட்டது என்பதை பாருங்கள் திருச்சி சிவா Vs கனிமொழி பனிப்போரில் சிவாவுக்கு எதிராக சூர்யாவை கனிமொழி தன் தரப்பாக எடுத்துள்ளார் ஆனால் தற்போது உதயநிதி Vs கனிமொழி,சபரீசன் Vs உதயநிதி என்ற பலப்பரீட்சையில் கனிமொழி ஆதரவாளரான தன்னுடைய அரசியல் இருப்பு கேள்விக்குறி ஆகி வெளியேறுகிறார் சூர்யா.

திமுகவில் தற்போது பெரிய தலைவர்களுக்கே இந்த அரசியல் நெருக்கடிகள் உள்ளதாக பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார் திருச்சி சூர்யா, இந்த கோஷ்டி பூசலால் இன்னும் பல பேர் பாஜகவை நோக்கி வருவார்கள் என்கிறார்..இதை விட அவர் ஒரு கருத்து சொன்னார்,இனி பாஜகதான் இங்கே வேகமாக வளரும் கட்சி அது 2024 தேர்தலிலேயே தன் வலுவான தளத்தை விரிவு செய்துவிடும் என்கிறார்.

திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை தாண்டியெல்லாம் சூர்யா போன்ற திமுகவினர் பலரால் அங்கே அரசியல் செய்ய முடியாது என்பதே எதார்த்தம்.டெல்டா மாவட்டத்தில் பல மூத்த தலைவர்கள்,வளர்ந்து வந்த இளைய தவைர்கள் என பலருக்கு அமைப்பிலேயே ஒரு தேக்கம் வந்துள்ளது என்பது உண்மை.

இது திமுகவில் மட்டுமில்லை,அதிமுகவிலும் இதே பிரச்சனை உள்ளது.மறைந்த வடகாட வெங்கடாச்சலம் குடும்பம் அதிருப்தியில்தான் உள்ளார்கள்.அவருடைய மகள் தனலெட்சுமி,விஜயபாஸ்கரை எதிர்த்து அரசியல் செய்தாரென கட்சியை விட்டு நீக்கியது அதிமுக..

எம்ஜிஆரோடு நின்ற பெரிய தலைவர்களில் ஒருவரான குழ.செல்லையா அவர்களின் மகன் அருள்நம்பிக்கு சீட்டு மறுக்கப்பட்டது 2021 தேர்தலில்..அவரைப் போன்ற தலைவர்களும் இங்கே அதிருப்தியில்தான் உள்ளார்கள்..ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே பிரச்சனை உள்ளது.செல்வாக்கு உள்ள தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.

அதிகாரத்தை அடைவதே ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இலக்கு.அதற்கு எந்த கட்சி உதவுமோ,எந்த கொள்கை மக்களிடம் செல்லுபடியாகுமோ அதை பின்பற்றி வெற்றி பெற இங்கே யாரும் தயங்கமாட்டார்கள்..2024 தேர்தலுக்குள்  கோஷ்டி பூசலில் சிக்கிய பல முக்கிய தலைகள் பாஜகவில் ஐக்கியமாவார்கள் என்பதே அரசியல் எதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார் சோழன்.