24 special

நகை பணத்துடன் மனைவி ஓட்டம் கணவரை மிரட்டும் தாய்மாமன்?

Madurai issue
Madurai issue

மதுரை :  முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்த பெண் நகை பணத்துடன் மனைவி மாயமாகிவிட்டார் என கணவன் புகார் தெரிவித்துள்ளார் மேலும் அவரை பெண்ணின் தாய் மாமன் மிரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,


மதுரை அடுத்த  மேலூர் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (37) மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் கொடுத்த மனுவில்  கூறியிருப்பதாவது:   மேலூர் நாகம்மாள்  கோவில் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (23)  என்பவருக்கும் எனக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 30ம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேலூர் சிவன் கோவில்  திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 40 நாட்களில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டேன். பின்னர்  வெளிநாட்டில் இருந்து எனது மனைவிக்கு தனலட்சுமிக்கு வீடு கட்டுவதாக ரூ 6 லட்சம் கொடுத்திருந்தேன். மேலும் வீட்டில்  10 பவுன் நகைள் வைத்திருந்தேன்.

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு வெளி நாட்டில் இருந்து திரும்பி வந்தேன்.  ஆனால் எனது மனைவி தனலட்சுமி  அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் அவரை குடும்பம் நடத்த அழைத்தபோது   வரமறுத்துவிட்டாள்.  அக்கம் பக்கத்தில் விசாரித்தேன்.  தனலட்சுமிக்கு  மணிகண்டன் என்பவருடன் ஏற்கனவே  திருமணமாகி அவர்களுக்கு ஒரு ஆண்   குழந்தையும் பிறந்திருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

எனது பணம் மற்றும்  நகையை திருப்பிக்கேட்டபோது  தனலட்சுமியின் தாய்மாமன் கிருஷ்ணன் என்ற கிச்சா  எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவரது கூட்டாளிகளும்  என்னை அடிக்கடி போனிலும் நேரில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் எனது மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

வழக்கை வாபஸ் பெறும்படியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.   எனது பணம் மற்றும் நகைகளை  மீட்டுத்தர வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.பெண் ஒருவர் தனக்கு குழந்தை இருப்பதை மறைத்து கணவனை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சம்பந்தப்பட்ட அரசு தரப்பு உடனடியாக மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்வதுடன் புகார் கொடுத்தவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் பார்வையாக உள்ளது.