24 special

கேப்டனுக்கு புகழாரம் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Vijayakanth, Pm Modi
Vijayakanth, Pm Modi

சிறுவயதில் இருந்து சினிமா மெது ஆர்வம் கொண்டு  சினிமாவில் சாதித்தவர் கேப்டன் விஜயகாந்த். மதுரையை சேர்ந்த விஜயகாந்த் சென்னைக்கு வந்து சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார் தனது சொந்த முயற்சியில். இவர் கடந்த மாதம் இறந்த நிலையில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் அவரது மகன்களுக்கு உதவி கரம் நீட்டினார்கள் இது விஜயகாந்த் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மத்திய அரசு விஜயகாந்துக்கு நினைவு பரிசு வழங்கியது ராசிகர்ளுக்கு பெரும் நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு போட்டியாக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் இவருக்கென்று தனி ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். மக்களால் விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்டவர். ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். நடக்க சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அனைத்தையும் ஒற்றை ஆளாக செய்து வந்தார். 

சினிமா துறைக்கு புது முகங்கள் யாரேனும் வந்தால் அவர்களை தன படத்தில் நடிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி விடுவது மும்முரமாக இருப்பார். அந்த வரிசையில் நடிகர் விஜய் மற்றும் வடிவேலும் என்பது குறிப்பிடதக்கது. சினிமா துறையை தாண்டி அரசியலிலும் சாதித்தவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடக்கி மக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவராக அவதாரம் எடுத்தார். அதிமுகவுடன் எழுந்த மோதலை அடுத்து சில எம்.எல்.ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகினர். இதனால் ரொம்பவே அப்செட்டான விஜயகாந்த் அப்போதிருந்தே மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் சொல்வதுண்டு. அப்போது இருந்தே அவரது உடல்நலம் சற்று தளர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த மாதம் உடல்நலம் மிகவும் பின் தங்கி இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்ட ரசிகர்கள் மற்றும் மக்கள் கண்ணீர் விட்டனர். அவரது உடல் தமிழக அரசு சார்பாக அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அவரது நினைவிடத்திற்கு மக்கள் கூட்டம் குறையாமல் வந்து செல்கின்றனர். அங்கு உனவு தினமும் வழங்கப்படும் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்தார். 

இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் சார்பில் வழங்கப்படும் பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியோடு விஜயகாந்த்தை நினைவுகூர்ந்துவருகின்றனர். மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் விருதை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஏற்கனவே பிரதமர் மோடி விஜயகாந்த் மறைந்த பிறகு அவரை பற்றி தமிழகத்திற்கு வந்த போது புகழை தெரிவித்தார். அதன் பின் விஜயகாந்த் குறித்து கடிதம் எழுதியிருந்தார், தற்போது பத்ம பூஷன் விருது பிரதமர் மோடி அவர்களின் நட்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது.