Cinema

சோகத்தில் திரையுலகம் கண்ணீர் விடும் இளையராஜா..!

Vadivelu, Bhavatharini
Vadivelu, Bhavatharini

தமிழ் சினிமாவில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. இவரின் மகள்தான் பவதாரினி. இளையராஜாவின் இசையில் பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். குறிப்பாக பாரதி படத்தில் இவர் பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. சினிமா துறையில் கடந்த மாதம் விஜயகாந்த் மறைந்த பிறகு மொத்த திரையுலகமும் சோகத்தில் இருந்தது. அதற்குள் பாடகி பவதாரினி மறைவு திரையுலகினர் இடையே மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி. கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் இருந்தாலும் மகள் மீது அதிக பாசம் கொண்டவர் இளையராஜா ஒரே மகளான பவதாரிணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பித்தப்பையில் கல் இருப்பதாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதே 4 வது நிலை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், இலங்கையில் ஆயுர்வேத இருக்கும்போதே உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளார். பவதாரிணியின் திடீர் மரணம் இசை ரசிகர்களுக்கும், இளையராஜாவின் ரசிகர்களும், திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்தியாசமானதாகவும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமைந்தது. பவதாரிணியின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகர் வடிவேலு கண்ணீர் விட்டு இரங்கல் தெரிவித்துள்ளார், பிசியாக சினிமாவில் நடித்து வரும் படிங்கர் வடிவேலு தற்போது மாரிசன் படத்தில் நடித்து வருகிறார். இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு எங்க குடும்பத்தார்கள் எல்லோருமே ஒன்னும் புரியல என்ன ஆச்சு 47 வயசு பொண்ணு இவ்வளவு சீக்கிரமா கடவுள் கிட்ட போயிடுச்சே என கதறி அழுதுவிட்டேன் என வடிவேலு ஆடியோவில் கூறியுள்ளார். பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல அது ஒரு தெய்வக் குழந்தை அந்த குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். 

அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் பூராவுமே இன்னைக்கு ரொம்ப நொறுங்கி இருப்பாங்க.. தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதுக்கு மேல என்னால பேச முடியல என பவதாரிணியின் மறைவு செய்தி அறிந்து நடிகர் வடிவேலு மனமுடைந்து அழுதபடி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த ஆடியோ பேட்டி ரசிகர்களை உருக செய்துள்ளது.

நடிகர் விஷால் இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ, வாசுகியின் உறவினராகவே உன்னை நான் அறிந்ததைவிடவும்; உடன் பிறந்த சகோதரியாகவே நினைக்கிறேன். அப்படித்தான் நான் உன்னை மிஸ் செய்கிறேன். ஒரு நல்ல உள்ளம் எங்களை விட்டு பிரிந்து செல்கிறது. கடந்த சில வாரங்களாகவே நான் விரும்பும் நபர்களை ஏன் இழக்கிறேன் என்று தெரியவில்லை. கண்டிப்பாக நீ நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பாய். உனது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உன் இழப்பை சமாளிக்கும் சக்தி அவர்களுக்கு கிடைக்கட்டும் என்று கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார். திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.