Cinema

ஏ ஆர் ரகுமான் செய்த வேலையை பகிரங்கமாக போட்டு உடைத்த ஜிவி பிரகாஷ்!

AR Rahnan, jeevi prakash
AR Rahnan, jeevi prakash

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஏ ஆர் ரகுமானின் முதல் படம்  இந்த படமே, இந்த முதல் படத்திலேயே தனது பாடல் மற்றும் பின்னணி இசையால் ஒட்டுமொத்த தமிழர்கள் மனதிலும் இடம் பிடித்து தேசிய விருதையும் வென்றார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் சென்று அசத்தி அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் சென்ற ஏ ஆர் ரகுமான் இந்தியாவில் எப்படி தனது முதல் படத்தின் மூலமே தேசிய விருதை வென்றாரோ அதேபோன்ற ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமாகிய முதல் படத்தில் கோல்டன் குளோப் விருதுகளையும் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார். இதனை அடுத்து பல முன்னணி மற்றும் சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் மற்றும் இசையமைத்து வந்த ரகுமான் தற்பொழுது வளர்ந்து வரும் இயக்குனர்கள் படத்திலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் இந்த பணியை தனது மாமன்னன் திரைப்படத்தின் மூலம் தொடங்கிய ஏ ஆர் ரகுமான் தற்பொழுது அயலான் திரைப்படத்திலும் தனது இரண்டாவது படத்தை இயக்கும் ஒரு இயக்குனரின் படத்தில் இசையமைத்திருப்பது சினிமா வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.


சினிமா துறையை பொறுத்தவரையில் அதிக பாராட்டையும் மிகுந்த செல்வாக்கையும் பெற்றுள்ள ஏ ஆர் ரகுமான் தனது மத நம்பிக்கையிலும் மற்ற அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விவகாரங்களில் பெரும் விமர்சனங்கள் மற்றும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். திலீப் குமார் என்ற தனது இயற்பெயரை ஏ ஆர் ரகுமான் என்று அவர் மாற்றியதற்கு முக்கிய காரணமாக அவரது தந்தை சேகர் அவர்களின் உடல்நிலை குறைவாக இருந்த பொழுது தர்காவிற்கு சென்று வழிபட்டதால் அவர்கள் உடல் நலம் தேறி சிறிது காலத்திற்கு உயிர் வாழ்ந்ததாகவும் அதற்குப் பிறகு அவர் இஸ்லாம் மதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு அந்த மதத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது. அதோடு ஏ ஆர் ரகுமானின் வீட்டிற்கு யாரேனும் ஒருவர் விபூதி அல்லது தன் பக்தியை வெளிப்படுத்தும் தோற்றங்களோடு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் சென்றால் அதனை உடனடியாக அளிக்கும்படி அவரது தாயார் கூறியதையும் ஒரு பிரபல பாடலாசிரியர் தெரிவித்ததும் இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து பெரும்பாலும் தனது திரைப்படங்களில் இந்து மத நம்பிக்கை வெளிப்படுத்தும் பாடல்களையும் இசைகளையும் இசைக்காமல் வந்த ஏ ஆர் ரகுமான் 2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் கன்னிச்சாமி என்று தொடங்கும் ஐயப்ப பாடலை இசையமைத்தார் என்று அவரது ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் அந்த பாடலை இசைக்கவில்லை அவரது சகோதரி மகனான ஜிவி பிரகாஷ் இசையமைத்தார் என்ற வதந்தியும் சமூக வலைதளத்தில் உலா வந்தது. 

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜிவி பிரகாஷ் தனியார் youtube சேனல் ஒன்றில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒரு ரசிகை பாய்ஸ் திரைப்படத்தில் ஐயப்ப பாடலை நீங்கள் தான் இசை அமைத்ததாக கூறப்படுகிறது அது உண்மையா என்று கேட்டுள்ளார் அதற்கு ஜி வி பிரகாஷ் அதற்கு நான் இசையமைக்கவில்லை பிரவீன் மணி தான் பண்ணாரு நான் அந்த படம் எடுக்கப்பட்ட பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று ஜீவி பிரகாஷ் கூறியது, உண்மையில் ஏ ஆர் ரகுமான் படத்தில் கூட தன் மதத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்தியது. மேலும் பாய்ஸ் திரைப்படத்தில் ஐயப்ப சாமியின் பாடலை ஏ ஆர் ரகுமான் பண்ணவே இல்லை! தீவிர மதப் பற்றிக் கொண்டதால் இது போன்ற பாடல்களை பாட மாட்டேன் இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியது உண்மைதான் போல என நெடிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.