24 special

திமுக மீது கடும் கோபத்தில் விவசாயிகள்...!டெல்டாவும் கைவிட்டு விட்டது....!

Mkstalin
Mkstalin

டெல்டா மாவட்டங்களில் 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேட்டூர் அணையில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, நாகை மாவட்டம், வேதாரண்யம், கீழையூர், தலைஞாயிறு ஒன்றியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


முதல்வரை சந்தித்து விவசாய தேவைகள் குறித்து மனு அளிக்க அனுமதிக்குமாறு, வேளாண் துறையினரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. முதல்வரும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மறு நடவுக்கும் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவார் என, நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிடவில்லை. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், கீழையூர், தலைஞாயிறு ஒன்றியங்களில் இருந்து யாரையும் சந்திக்க விடாமல் வேளாண் துறையினர் தடுத்தனர். அவர்களுக்கு சாதகமாக உள்ள சிலரை முதல்வருடன் சந்திக்க வைத்து, நான்கு மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் என, முதல்வரை ஏமாற்றி உள்ளனர்.

விவசாயிகளை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, அரசுக்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சேலம் மேட்டூர் அணையில், 110 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் விபரங்களைப் பெறாமல், ஜூன் 12ல் அணையிலிருந்து முதல்வர் தண்ணீர் திறந்து விட்டார். ஆகஸ்ட்டில், 18,000 கன அடி நீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், 10,000 கன அடி நீர் மட்டும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, கால்வாய் ஓரங்களில் உள்ள பாசன பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை நெற்பயிர்கள் கருதி, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

டெல்டா விவசாயிகள், இந்த குறுவை சாகுபடியில், தங்கள் சேமிப்பு மற்றும் உடல் உழைப்பை இழந்ததுடன், கூட்டுறவு சங்க கடன்காரர்களாகவும் மாறியுள்ளனர்.முன்னெச்சரிக்கையுடன் செயல்படாத, தி.மு.க., அரசு மீது மிகுந்த கோபத்துடனும் உள்ளனர்.

தி.மு.க., தன் கூட்டாளியான கர்நாடக காங்கிரசிடம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட வற்புறுத்தவில்லை. இதற்கான காரணத்தை, டெல்டா விவசாயிகளிடம் விளக்க வேண்டும்.தி.மு.க., அரசு இரண்டு ஆண்டுகளாக, குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யவில்லை. இந்த ஆண்டு குறுவை விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும், உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

சம்பா சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு, சம்பா மற்றும் தாளடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து, தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்று பசப்பு வார்த்தை பேசி, பிரச்னையை திசை திருப்பும் முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசு தொடர்ந்து மெத்தனப்போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்க, போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

டெல்டா எங்கள் கோட்டை என தொடர்ந்து வார்த்தை ஜாலம் செய்துவிட்டு எங்களை நட்டாற்றில் விட்ட திமுகவிற்கு, வரும் தேர்தலைல் பாடம் புகட்டுவோம் என விவாசிய சங்கங்கள் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.