கோபத்தில் முதல்வர் செய்த காரியம்..!தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதனுடைய தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் என திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் பாஜகவை பல்வேறு நிகழ்ச்சிகளில் தாக்கி பேசி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பிறகு சிறப்புரை ஆற்றினார் மேலும் முதல்வர் பேசிய அனைத்து வார்த்தைகளும் பாஜகவை தாக்கியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை நோக்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருடைய கருத்துக்களில் பெரும்பாலானவை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் தான் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தியே சிறப்புரை முழுவதும் பேசியுள்ளார்.மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே இருக்கின்ற நட்பை பற்றி மிகவும் பெருமிதத்துடன் கூறினார் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுக விற்கும் கூட்டணி இருக்கிறதால் மட்டும் நட்பு ஏற்படவில்லை என்றும் திமுக கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் ஆளும் கட்சியாக இருந்த போதிலும் இந்த நட்பு தொடர்கிறது என்றால் இது கொள்கை நட்பாக இருக்கிறது என்று கூறிவிட்டு இந்த நட்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட தொடரும் என்று ஆணித்தரமாக கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல் மட்டுமல்ல ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று கூறியதுடன் தற்போது இந்தியாவில் பாஜக சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வருகிறது தமிழகத்தை எப்படியோ காப்பாற்றி விட்டோம் இதனைத் தொடர்ந்து இந்தியாவை காப்பாற்றுவதற்கு தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்துள்ளோம் முதல்வர் பாஜகவை தாக்கி பேசியது தற்போது பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஇவ்வாறு தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டணி முதல் கூட்டத்தை பற்றியும் அதனை தொடர்ந்து பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது கூட்டம் பற்றி கூறிவிட்டு மூன்றாவது கூட்டம் பூனாவில் நடக்கவிருக்கும் நிலையில் அதிலும் நான் கலந்து கொள்வேன் என்று உறுதியாக கூறினார்.
எப்பொழுதும் திருவாரூரில் தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன் ஆனால் இன்று அதை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை இங்கு தொடங்குகிறேன் என்று கூறினார். இவ்வாறாக தனது உரை முழுவதும் பாஜகவை குறி வைத்தும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கியும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏன் பேசியுள்ளார் என்பதன் பின்னணி தெரியவந்துள்ளது . அதாவது தொடர்ந்து இந்தியா என்ற கூட்டணியில் ஒவ்வொரு விக்கெட்டாக அடிபட்டு வரும் நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை இந்தியா தாக்குப்பிடிக்காது என்று முதலமைச்சருக்கு நேரடியாகவே தெரிய வந்துள்ளது.
இப்படி ஏதோ ஒரு தகவல் முதலமைச்சருக்கு சென்றுள்ளதால் தான் அவர் பயத்தில் பேசினார் எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில அமைச்சர்கள் வழக்கை அமலாக்கத்துறை இன்னும் தீவிரமாக கையில் எடுக்கும் என்ற தகவல்களும் முதல்வருக்கு கிடைத்துள்ளதால் இப்படி கோபத்துடன் பேசியுள்ளார் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள அஜித்பவார், கெஜ்ஜரிவால் தரப்பு தற்போது தள்ளாடும் நிலையில் உள்ளதால் முதல்வர் அந்த அச்சத்தில் வேறு இப்படி பேசியிருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.