நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜகவினரையும் பிரதமர் நரேந்திர மோடியையும் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார். பிரதமர் காஷ்மீர் சென்றால் அதற்கு ஒரு விமர்சனம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் பொழுதும் இதற்கு என்று ஒரு விமர்சனம், எந்த ஒரு நல திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தாலும் அதற்கு பிரதமரை விமர்சிக்கும் வகையிலே அவர் பதிவிட்டு வருவது பாஜகவினரை கோபப்படுத்தியதுடன் அவருக்கு எதிரான கருத்துக்களை முன் வைக்க பாஜகவினரையும் தூண்டியது.
இப்படி சர்ச்சை பதிவுகளை செய்துகொண்டிருந்த பிரகாஷ் ராஜ், ஒரு நாட்டின் சாதனையை அதுவும் சந்திராயன் சாதனையை கிண்டல் செய்யும் விதமாக அவர் பதிவிட்டது அவரை மேலும் சர்ச்சையில் சிக்க வைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவப் பகுதியில் தனது காலை பதித்து உள்ளது அதுமட்டுமல்லாமல் நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ரோவர் வாகனம் விக்ரம் லேண்டரிலிருந்து இறங்கி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது என்ற தகவல்கள் இஸ்ரோவில் இருந்து வெளிவந்ததை அடுத்து பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆச்சரியமாக உள்ளது சந்திராயன் மூன்று நிலவிலிருந்து எடுத்த முதல் புகைப்படம் என குறிப்பிட்டு ஒரு நபர் டி ஆத்தும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த பதிவு குறித்து சிலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டாலும் இவர் ஏன் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஒரு நாட்டின் சாதனையை இப்படி ஒரு நடிகர் கேலி செய்து வருவது கண்டிக்கத்தெருந்தது என்று பல விமர்சனங்கள் பிரகாஷ்ராஜிற்கு எதிராக சமூக வலைதளத்தில் வலம் வந்தது. அதிலும் சந்திராயன் மூன்று திட்டத்தை குறித்து இப்படி சர்ச்சையான பதிவை பதிவிட்டதற்காக பிரகாஷ்ராஜ் மீது கர்நாடக மாநிலம் பனம் கட்டி போலீசில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் நாடார் அமைப்பினரும் பிரகாஷ்ராஜுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.
அதற்குப் பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் விஷயம் விபரீதமாவதை உணர்ந்து இந்த பதிவிற்கு விளக்கம் அளிக்கிற வகையில் மற்றொரு பதிவை பதிவிட்டார் அதாவது நான் காமெடிக்காக கூறினேன் 1960 இல் எங்களது பெருமைக்குரிய கேரளா டீ கடை காரரை பற்றி நாங்கள் பேசி வருகிறோம் அதைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதனை படியுங்கள் என்று ஒரு செய்தியின் லிங்கையும் அவர் இணைத்து பதிவிட்டு சந்திரயான் மூன்று திட்டம் குறித்த வாழ்த்துக்களையும் இஸ்ரோ அடைந்த சாதனைக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை பெருமைப்படுத்த தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய விருதுகள். அறிவிக்கப்பட்டது.அதில் தமிழகத்திற்கு குறைந்த விருதுகளே கிடைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த முறை 10 தேசிய விருதைப் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பு வெளியான சூரனை போற்று படத்தை போல இந்த முறை அதே சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் வெல்லும் சிலர் கூறிவந்த ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என்று பதிவிட்டுள்ளார் இதனால் இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஏற்கனவே சந்திராயனுக்கு விமர்சனம் செய்து வாங்கி கட்டிக்கொண்டு பின்னர் சரணடைந்ததுபோல் இந்த முறையும் பிரகாஷ்ராஜ் பல்டி அடிப்பார் என இணையதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.