24 special

முற்றிய விவகாரம்.. பொதுவெளியில் போட்டு உடைத்த விஷால்...

vishal ,udhayanithi
vishal ,udhayanithi


உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்து  பதவி வகித்து வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இப்பொழுது தமிழ்நாட்டில் வெளியாகும் பல திரைப்படங்கள் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. குருவி, ஆதவன், ஏழாம் அறிவு, வணக்கம் சென்னை எனத் தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்து வந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்து வந்துள்ளது. மேலும் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கழகத் தலைவன், மாமன்னன் போன்ற திரைப்படங்களும் இவை தான் தயாரித்து வந்தது. 


மேலும் இந்த தற்பொழுது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சனங்களை பெற்று வரும் இந்தியன் 2 திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தயாரித்துள்ளது. மேலும் வரும் 2025 ஆம் ஆண்டு இதே இந்தியன் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் தயாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் முதலில் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டு தற்பொழுது அரசியலில்  நுழைந்துவிட்டார். தற்பொழுது அமைச்சராகவும் இருந்து வருகிறார். மேலும் துணை முதலமைச்சர் ஆக ஆகப் போகிறார் என்ற செய்திகளும் வெளியாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் திமுக சார்பில் எம்பி பதவிகளை ஏற்ற கொஞ்ச பேர் கருணாநிதி வாழ்க ஸ்டாலின் வாழ்க என்று கூறியதை தொடர்ந்து உதயநிதி வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பி வந்தனர். 

இதன் மூலமே ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் வரப்போகிறார் என்று தெரிந்து விட்டது. மேலும் அரசியலில் மட்டும் தான் கவனத்தை செலுத்த போகிறாரா என்று எதிர்பார்த்து வரும் சமயத்தில் தற்பொழுது சினிமாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். பெரும்பாலாக இவர் எடுக்கின்ற திரைப்படங்கள் கட்சி சார்ந்ததாக தான் இருந்து வருகிறது. கட்சியின் பெயரை உயர்த்த வேண்டும் என்பதற்காக அதனை வைத்து திரைப்படங்கள் எடுப்பது போன்று இருந்து வருகிறது. பொதுவாக திரைப்படம் என்றாலே என் நல்லதும் கெட்டதும் இரண்டையுமே காட்டும் விதத்தில் இருக்க வேண்டும். 

ஆனால் இவர் எடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஒரு கட்சியை உயர்வாகவும் மற்ற கட்சிகளை தாழ்வாகவும் காண்பிக்கும் விதத்தில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்திலும் அதிமுக ஆட்சி காலத்தில் அளிக்கப்பட்ட இலவச பொருட்கள் மட்டுமே காட்டப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்காலத்தில் கலைஞரால் கொடுக்கப்பட்ட இலவச டிவியை காட்டவில்லை என்றும், எதிர்காலத்தில் பார்ப்பவர்கள் மத்தியில் அதிமுக மட்டும் தான் இது போன்ற தவறான பொருட்களை கொடுத்ததாகவும் இவர்கள் கொடுக்கவில்லை என்று கூறும் வகையில் அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்திற்கு பல விமர்சனங்களும் எழுந்து வந்த நிலையில் இந்த கதை இப்படி அமைந்ததற்கு உதயநிதி தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. 

இதனைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படம் நல்ல வரவேற்பு பெறாததற்கு காரணம் இதுதான் என்று இயக்குனர் சங்கரும் கருதி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இது மட்டும் அல்லாமல் நிறைய படங்களில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஷாலும் பேட்டி கொடுத்துள்ளார். அதில் சினிமா துறையில் அரசு தலையிட வேண்டாம் என்றும், கடந்த ஆட்சிகளில் சினிமாவில் அரசு தலையிடவில்லை என்றும் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த வருடம் சினிமாவிற்கு மிகவும் கடினமான வருடம் என்று கூறி தனது வேதனையை  பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் விஷால் பேசியது குறித்து சினிமா விமர்சகர்களிடம் விசாரித்த சமயம், கடந்த அதிமுக ஆட்சியில் இல்லாத அளவிற்கு இப்பொழுது திரைத்துறை திமுக கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது என்ற ஆதங்கமே விஷால் பேசியது என கூறுகின்றனர்.. மேலும் உதயநிதி தரப்பில் இருந்தும் விஷாலுக்கு எதுவும் கடந்த சில படங்களுக்கு உதவி செய்யவில்லை அதனால் விஷால் இப்படி வெறுத்து பேசிவிட்டார் எனவும் கூறுகின்றனர்....