அம்மா, அப்பா ஏன் பாட்டி கூட தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு குடும்பத்திலிருந்து 2013ல் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக கீர்த்தி சுரேஷ் தற்போது அடைந்துள்ள பிரபலத்திற்கு தமிழ் திரைப்படங்களே முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் தமிழில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுக்கவில்லை இதற்கு அடுத்ததாக ரஜினி முருகன் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெருவாரியான வரவேற்பை பெற்றது. ஒரே படத்தில் பட்டுத்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் கீர்த்தி சுரேஷ் இதற்கு பிறகு சிவகார்த்திகேயனுடனே மீண்டும் ரெமோ என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்து அசத்தினார் கீர்த்தி சுரேஷ். இந்த இரண்டு படங்களுமே கீர்த்தி சுரேஷ் திரை பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது இதனை அடுத்து பல பிரபல மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ்.
அதாவது பைரவா என்ற திரைப்படத்தின் மூலம் விஜயுடன் இணைந்து நடித்தார் அதற்குப் பிறகு சர்க்கார் என்ற படத்தில் இணைந்து நடித்தார். இருப்பினும் இந்த இரண்டு திரைப்படங்களுமே பெருமளவிலான வரவேற்பை பெறவில்லை. அதற்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தின் மூலம் பல விருதுகளை பெற்றார். அதுமட்டுமின்றி மாமனிதன் என்ற திரைப்படத்திலும் தற்போதைய அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலுடன் நடித்து வெற்றியைப் பெற்றார். தற்போது ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகவும், ஹிந்தி திமிப்பிற்கு எதிராக இந்த படம் பேசும் என்றும் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
முன்னதாக கலைஞரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அதாவது நயன்தாராவிற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் மரியாதையை விட கீர்த்திக்கு நல்ல வரவேற்பு மரியாதை கீர்த்திக்கு கிடைத்ததாகவும் இதனை அடுத்து கீர்த்தி மேடையில் பேச வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்குப் பிறகு ரகு தாத்தா என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி எதிர்ப்பு கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. கீர்த்தி சுரேஷ் திமுகவின் பக்கம் சாய்ந்து விட்டாரா திமுகவின் ஆதரவாளராக இருப்பவர்களின் லிஸ்டில் சேர்ந்து விட்டாரா என்றும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரகு தாத்தா திரைப்படத்தின் இசை வெளியிட்ட விழா சமீபத்தில் நடைபெற்றது அதில் கீர்த்தி சுரேஷ் பேசும்பொழுது, ரகு தாத்தா திரைப்படம் ஒரு முழுமையான காமெடி திரைப்படம் இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்பை பற்றி பேசவில்லை பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது. மேலும் இந்த படத்தில் எந்த மாதிரியான திணிப்பு பற்றி பேசப்பட்டுள்ளது என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று பேசியிருந்தார். அதே சமயத்தில் சில பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் பேசும்பொழுது எப்பொழுதுமே தனது நடிப்பை மீறி இயல்பாக பேசுகிறேன் என்ற பெயரில் ஒன்றை பேசியிருப்பார் அது பல நேரங்களில் பார்வையாளர்களை கடுப்படைய செய்திருக்கும். அதன் படியே தற்போது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று நான் என்னுடைய இயக்குனரை பற்றி பேச மறந்து விட்டேன் என்று கூறி பிறகு தனது இயக்குனர் ஒரு கேமியோ ரோலில் இப்படத்தில் நடித்திருக்கிறார் என பலவாறு பேசியிருந்தார்.
இது தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி அதீதி சங்கர், சித்தார்த் மற்றும் இந்தியன் டு சேனாதிபதி ஆகியோர்களை ஆயிரம் மடங்கு உண்டு க்ரீஞ்சுகளின் தாயாக இவர் விளங்குகிறார் என்று நெடிசன்கள் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.