24 special

மத்திய அரசு போட்ட மாஸ்டர்.. பிளான் வேற லெவலில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்

delhi
delhi

இந்தியாவில் உள்ள இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வலதுசாரி இந்து அமைப்பாக அறியப்படும் ஆர் எஸ் எஸ் அமைப்பு 1925 இல் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் தொடங்கப்பட்ட 10 வருடங்களுக்குள்ளே வட இந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகமாகும்! இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது சாதியை ஏற்றத்தாழ்வுகள் இந்த அமைப்பில் இல்லாமல் ஒரு அடையாளத்துடன் ஒன்று சேர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த அமைப்பு தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வேறு சில பெயர்களிலும் இயங்கி வருகிறது. அதாவது தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரிலும், மொரிசியத்தில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரிலும் இயங்கி வருகிறது. இந்த சங்கம் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை ஆனால் தன் கொள்கைகளை ஒத்த கொள்கைகளைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.. 


ஆனால் 1948 இல் காந்தியின் படுகொலையில் இந்த அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் நன்னடத்தை காரணமாக இந்த தடை நீக்கப்பட்டது மேலும் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது ஏற்பட்ட அவசர நிலை காலத்திலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டு பிறகு மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த அமைப்பில் அரசு அதிகாரிகள் சேர்வதற்கான தடை மட்டும் நீடித்துக் கொண்டே இருந்தது. தற்போது இந்த தடையை மத்திய அரசு நீக்கி, ஆர் எஸ் எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் பங்கு பெறலாம் என்று இந்த அமைப்பில் சேர்வதற்காக காத்துக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பச்சைக்கொடியை காண்பித்துள்ளது. 

தேசத்தின் நலமே முக்கியம் என்ற கருத்தை கொண்டு செயல்பட்டு வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பில் இதுவரை எந்த அரசு ஊழியர்களும் சேர முடியாத மற்றும் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததை தற்போது மத்திய அரசு நீக்கி அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பில் சேரலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது பலரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் பல அரசு ஊழியர்கள் தேசத்திற்காக தனது உளமார்ந்த பங்கை செலுத்த இந்த அமைப்பில் சேர முடியாத நிலை இருந்து வந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளதால் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் தற்போது அரசு பணியில் இருப்பவர்கள்

என பலர் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேருவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே அதை எதிர்க்கும் படியான நடவடிக்கைகள் அவ்வப்போது நிகழ்ந்து வருவதால் சமூக வலைத்தளத்தில் மட்டும் தங்கள் கேள்விகளை முன்வைத்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் பிறர் இனி ஆர் எஸ் எஸ் இல் இணைந்து தேசியத்தை காக்க இணைந்து போராடுவார்கள் என்று கூறப்படுகிறது. 

இருப்பினும் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சிகள் இதனை எதிர்த்தாலும் தேசியவாதிகள் இதனை ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இனி மூலை முடுக்கெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை காணலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.