நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது பாஜகவை தோற்கடித்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளான திமுகவும் முனைப்பிலிருந்து வருகின்றன. அதோடு இதே காரணத்திற்காக அதாவது பாஜகவை மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை பெற விடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட இண்டி கூட்டணியும் தற்போது சிதைவுற்று நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்தனியாக எதிர்கொள்ளதாக செய்திகள் வெளியாக இருப்பது காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பை அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் தள்ளியுள்ளது. இதற்கிடையில் திமுக இனி தேசிய அளவில் உள்ள கூட்டணியை நம்பிக்கொண்டிருந்தால் வேலைக்காகாது என ஆலோசித்து தமிழகத்தில் திமுகவின் எம்பிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.
ஆனால் தமிழகத்தில் திமுகவிற்கு நிலவும் சூழ்நிலையை பார்த்தால் அடுத்த திமுகவால் ஆட்சி பொறுப்பை ஏற்க முடியாது போலிருக்கிறது! ஏனென்றால் கடந்த தேர்தலின் பொழுது கொடுத்த வாக்குறுதியை இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை அதற்காக ஆசிரியர் சங்கங்கள் முதல் அனைத்து தொழில் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எந்த நேரத்தில் யார் போராட்டத்தை அறிவிப்பார் எவ்வளவு நாட்கள் அந்த போராட்டம் நீடிக்கும் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழல் வழக்குகள் மற்றும் அமலாக்க துறையின் ரயிலில் திமுக அமைச்சர்கள் பெருமளவில் சுற்றி வருகின்றனர் அவர்களது ஊழல் விவகாரமும் ஒவ்வொன்றாக வெளிவருவது திமுக அரசிற்கு பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் திமுகவின் முக்கிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவரும் ஊழலில் சிக்கி சிறை தண்டனை பெற்று இருப்பதும் இருவரும் அமைச்சர் பதவியை இழந்திருப்பதும் திமுகவில் நடக்கும் ஊழலுக்கு முக்கிய எடுத்துக்காட்டுகளாக விளங்குகிறது என்று மக்களை விமர்சனம் செய்யும் அளவிற்கான நிகழ்வுகளும் நடைபெற்றது. இதற்கிடையிலே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடல் நிலையும் மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது அவருக்கு மருந்துகளை கண்டுபிடிக்காத ஒரு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாகவும் அதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் இந்த வியாதிக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே முதல்வர் அப்போது வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதோடு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரபல கோவிலாக விளங்குகின்ற குருவாயூர் கோவிலின் முகப்பில் உள்ள தளவாடங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற பொழுது அந்த தளம் அப்படியே சரிந்து விழுந்ததும் அபசகுனமாக கருதப்பட்டது.
மேலும் இதனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்தது ஏனென்றால் திமுக பெரும் அளவில் சனாதனத்தை எதிர்ப்பது, இந்து மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பது என்ற பேச்சுகளை பேசி வருவதாலும் இது போன்ற நிகழ்வு நடந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் மற்றுமொரு அபச குணம் ஏற்பட்டுள்ளது திமுக தரப்பை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி தொட்டியம் பகுதி அருகே வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக திமுக அமைச்சர் கே என் நேருவை வரவேற்பதற்கு அப்பகுதியில் வெடி வெடிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டாசுகளின் தீப்பொறிகள் சாமியான பந்தலில் பட்டு சாமியான பந்தலும் தீ பற்றி எரிந்துள்ளது. எந்த ஒரு விழாவிற்காக சாமியான பந்தல் அமைக்கப்பட்டாலும் அது தீப்பற்றி எரிந்தால் நிச்சயம் அபசகுணத்திற்கான ஒரு அறிகுறி என அப்பகுதியில் உள்ள சிலரே கூறியுள்ளதாகவும் இதனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடும் சரிவு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்து கே.என்.நேரு தரப்பு தன் மகனுக்கு சீட்டு கேட்கும் நேரத்தில் இப்படி அபசகுனமாக நடப்பது சரியில்லையே என பரிகாரம் தேடுவதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.