24 special

வைரலாகும் கிறிஸ்துவ மதபோதகர் வீடியோ....

church issue
church issue

ஒவ்வொரு மதத்திலும் அவர்கள் வழிபடும் இடம் புனிதமானது. இந்து மதத்தவருக்கு கோவில் மிகவும் புனிதமானது இஸ்லாம் மதத்தினருக்கு மசூதி மிகவும் புனிதமானது, அதேபோன்று கிறிஸ்தவ மதத்தினருக்கும் சர்ச் எனப்படும் தேவாலயங்கள் புனிதமானது. ஆனால் அந்த ஆலயத்தில் பாதராக இருந்து கொண்டு ஒருவர் ஆபாச வார்த்தைகளை பேசி உள்ளது கிறிஸ்தவ மதத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாகவே கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஆலயம் சார்ந்த நடவடிக்கைகளில் பெருமளவிலான சர்ச்சைகளும் கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் ஒரு தேவாலயத்தின் கணக்குகளை குறித்தும் பங்குதாரர்களிடம் வசூலிக்கப்படும் பணங்கள் மற்றும் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்திலும் முறைகேடு இருப்பதாக கேள்வி எழுப்பிய ஒருவரை தேவாலயத்தை சேர்ந்த தலைமை பொறுப்பில் இருப்பவரே கொன்றதாக செய்திகள் வெளியானது. 


அதைத் தொடர்ந்து தேவாலயத்தை குறித்த மற்றுமொரு சர்ச்சையும் வெடித்தது. அதாவது தேவாலயத்தின் தலைமை நிர்வாகிகளிடம் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் சில தகவல்கள் மற்றும் கணக்குகளை தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்று கேள்வி எழுப்பியதற்கு அவர்களை அனுமதிக்காமல் வெளியே காக்க வைத்தது மட்டும் இன்றி உடனடியாக அந்த இடத்திற்கு காவல் அதிகாரி வரவழைக்கப்பட்டு தேவாலயத்தின் முன்பு கூடி இருந்தவர்களை அப்புறப்படுத்தும் சம்பவமும் நடந்தது மேலும் அந்த தேவாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் தேவாலயத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குற்றம் சாடியிருந்தார் இது குறித்த புகாரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தவறான முறையில் நடந்ததற்கு ஆதாரங்களை கேட்கிறார்கள் என்று அந்த பெண் செய்தியாளர்கள் மத்தியில் தனது குமுறலை தெரிவித்தார்.

இந்த நிலையில் தேவாலயங்களில் தலைவராகவும் மக்கள் அனைவராலும் மதிக்கக்கூடிய மத போதகர் என்ற பொறுப்பில் வகிக்கும் ஒருவர் கெட்ட வார்த்தைகளுடன் ஆபாச செய்கைகளையும் காட்டியது கிறிஸ்தவ தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமண்டலத்தின் கீழ் உள்ள 130 தேவ ஆலயத்திற்கும் தேவாலயத்தின் பங்கு மக்கள் வாக்களித்து பெருமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து லே செக்ரட்டரி மற்றும் பிற உயர்நிலை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி தற்பொழுது லே செகரட்டரி ஆக இருப்பவர் கிட்சன், இவரது பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களின் முடிய உள்ளதால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு லே செகரட்டரிக்கான தேர்தல் வர உள்ளதாக கூறப்படுகிறது அந்த தேர்தலில் இவருக்கு எதிராக தூத்துக்குடியின் முக்கிய புள்ளியாகவும் முன்னாள் லே செக்கரட்ரியாகவும் உள்ள எஸ் டி கே ராஜன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிட்சன் ராஜனுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ராஜனுக்கு ஆதரவாகவும் அவருடன் தொடர்புடையவர்களையும் கிட்சன்  பல காரணங்களை கூறி நீக்கி உள்ளார். 

கிட்சனின் இந்த நடவடிக்கைகளுக்கு மத போதகராக உள்ள செல்வின் துறை உறுதுணையாக இருப்பதாகவும் ராஜன் தரப்பில் குற்றம் சாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எஸ் டி கே ராஜன் உள்ளிட்ட முக்கிய நான்கு பெயர்களை தேவாலய உறுப்பினர்களில் இருந்து கிட்ஸன்  நீக்கியதால் இந்த சர்ச்சை மிகவும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் பரி பேட்டரிக் தேவாலயத்தில் சேகர கூட்டத்திற்கு தாசில்தார் தடை விதித்துள்ளார். ஆனால் மத போதகர் மற்றும் கிட்சன் தரப்பில் பெருமன்ற உறுப்பினர்களை ரகசியமாக அழைத்து தேவாலயத்தின் அறையை பூட்டிக்கொண்டு சேகர கூட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனை அறிந்த ராஜன் தரப்பினர் தாசில்தாரின் உத்தரவை மீறி சேகர கூட்டம் நடைபெறுவதாக குற்றம் சாடியுள்ளனர். மேலும் தேவாலயத்தில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த வாக்குவாதத்தில் தான் மத போதகர் செல்வின் துறை ராஜன் தரப்பினரை பார்த்து மிகவும் ஆபாசமாகவும் கெட்ட வார்த்தைகளில் அவர்களை திட்டி சண்டையில் ஈடுபட்டுள்ளார் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.