பிப்ரவரி மாத இறுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிற நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சியும் தீவிரப்படுத்தி வருகிறது அதில் சில கட்சிகள் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் ஆலோசனைக் கூட்டம் என பல கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது அதற்கான செய்திகளை தற்போது வெளியாகி வருகிற நிலையில் சில கட்சிகள் தனது பிரச்சாரங்களை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இன்னும் பெரும்பாலான கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து அறிவிப்புகளை வெளியிடாமல் உள்ளதால் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பாஜக இடையே இருந்த கூட்டணி முடிவுக்கு வந்து பாஜகவுடன் இனி அதிமுக கூட்டணி அமைக்காதது என்ற அறிவிப்பையும் வெளியிட்டது, மேலும் திமுக மற்றும் பாஜகவிற்கு இடையில் தான் போட்டி என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்ததும் அதிமுக தரப்பை சூடேற்றியது.இதனை அடுத்து அதிமுக தேர்தலில் நிச்சயமாக வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைப்பதற்காக திமுகவின் கூட்டணி கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டதாகவும் அதில் சில கட்சிகள் விரைவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இழந்த ஆட்சி மீறி பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் எடப்பாடி தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா கலை கல்லூரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அதிமுக கட்சியை சேர்ந்த மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராதிகா சுமார் 20 பேரை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த கல்லூரிக்கு சென்று இருக்கிறார்.
கல்லூரி திறப்பதற்கு முன்பாகவே அங்கு சென்ற அதிமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராதிகா அணி கல்லூரியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்துள்ளனர். கல்லூரிக்கு சென்று சுத்தம் செய்தது மட்டுமின்றி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார் ராதிகா, அதில் வருஷக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள் சுத்தமே செய்யவில்லை என்ற வீடியோ பதிவு தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது ஆனால் இவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. அதாவது இந்த கல்லூரியில் அனுமதி இன்றி கல்லூரி திறப்பதற்கு முன்பாகவே நுழைந்து அத்துமீறியதாக கல்லூரி முதல்வர் அதிமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராதிகா உள்ளிட்ட 20 பேர் மீதும் அத்துமீறி நுழைதல் மற்றும் சட்டவிரோதமாக கூடியது என புகார் அளித்துள்ளார். இதை அடுத்து வாலாஜாபேட்டை போலீஸ் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தி அதிமுக தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்தில் இடம்பெறாத மற்றுமொரு அதிமுக பிரமுகர் மீதும் கல்லூரி முதல்வர் புகார் அளித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக நிர்வாகியான சுகுமார் தூண்டுதலின் பெயரில் தான் அதிமுக மகளிர் அணி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் கல்லூரி முதல்வர் சீனிவாசன், ஆனால் சுகுமார் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யவில்லை இருப்பினும் மகளிர் அணி அத்துமீறி நுழைந்ததற்கு சம்பந்தமில்லாமல் அதிமுக நிர்வாகி சுகுமார் மீது கல்லூரி முதல்வர் ஏன் புகார் அளித்தார் என்பது குறித்த பின்னணியை விசாரித்த பொழுது தற்போது ராணிப்பேட்டை தொகுதி திமுக அமைச்சர் காந்தியின் தொகுதியாகும். அதே தொகுதியில் தான் அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் இருப்பதால் அத்துமீறி நுழைந்து கல்லூரி கழிப்பறை சுத்தமாக இல்லை என்று அதிமுக மகளிர் அணி கல்லூரியை சுத்தம் செய்தது வீடியோ வெளியிட்டது திமுக அமைச்சர் காந்தி தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் கல்லூரி முதல்வர் சீனிவாசனுக்கு திமுக தரப்பு அழுத்தம் கொடுத்து இப்படி ஒரு புகாரை கொடுக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.