24 special

அமைச்சர் துரைமுருகன் தீடீர் மருத்துவமனை விசிட்!.....வெளியான பின்னணி காரணம்!

Duraimurugan
Duraimurugan

திமுக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நல காரணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஒரு வாரமாகவே இருமல், சளி பிரச்சனையில் பாதிக்கப்பட்டு வந்த அமைச்சர் துரைமுருகன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு நேற்று மாலை அவர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.


இதற்கிடையில் அவர் ஏன் திடீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுத்தின் நிலையில். கடந்த சில தினங்களாக மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். அதில், குறிப்பாக மணல் மாபியா எனப்படும் தென் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம், கரிகாலன் ஆகியோரது வீட்டில் இரண்டாவது முறையாக சோதனை செய்த போது ஒரு சில அமைச்சர்களின் முக்கிய ஆவணம் கிடைத்ததாக தகவல் வந்தன. இந்நிலையில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விரைவில் சிக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அமலக்கத்தக்க துறை அதிகாரிகள் இந்த மாதம் இறுதிக்குள் அவரை நெருங்குவார்கள் என சில தகவலும் வந்தன.

இந்நிலையில், மணல் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகனை நெருங்கி விட்டதாக சொல்லப்படும் நேரத்தில் அமைச்சரோ வயது முப்பு காரணத்தை கொண்டு மருத்துவமனை வாசலை நாடியுள்ளார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், அடுத்த டார்கெட் எனக்கு என்று தெரிந்த காரணத்தாலேயே அமைச்சர் துரைமுருகன் சுதாரித்து கொண்டு இப்போது இருந்தே மருத்துவமனை சென்றுவந்தால் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் பிடிக்கும் போது தப்பிப்பதற்கு ஒரு காரணத்தை தேடி வருவதாக கூறுகின்றனர். மேலும், பொது செயலாளர் சிக்கினார் கட்சி ஆட்டம் காணும் என நினைத்து மாஸ்டர் பிளான் போடுவதாகவும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் சிக்கி உள்ள நிலையில் அடுத்ததாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சிக்குவார் என கூறப்படுகிறது. நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உறுதி செய்யப்பட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தண்டனை விதிக்க நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்நிலையில், அமைச்சரை பதவி பறிக்கப்படலாம், விழுமரம் மாவட்டத்திற்கு ஒரு இடைக்கால தேர்தல் வரவுள்ளது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது, இது தொடர்பாக திமுகவை சேர்ந்தவர்கள் அடுத்த நகர்வுக்கு எந்த வித உறுதுணையும் இல்லாமல் இருப்பதாகவும் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளார் அவர் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

நாளை வரக்கூடிய தண்டனை தீர்ப்பை பொறுத்தே திமுகவின் நகர்வுகள் இருக்கக்கூடும் நாடாளுமன்ற தேர்தலுக்குல் மேலும் மூன்று அமைச்சர்கள் வரை கைது செய்யப்படலாம் மந்திரி சபையே சிறையில் தான் நடக்கப்போகிறது என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அதில் ஒருவர் துரைமுருகன் அதனாலேயே அவர் இப்போது இருந்தே மருத்துவமனைக்கு சென்று வருகிறார் எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக குடியாத்தம் குமரன் ஒரு வீடியோ பதிவிட்டு அமைச்சர் துரைமுருகன் 60000 கொடு ஊழல் செய்திருப்பதாக குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.