24 special

செந்தில் பாலாஜியை தொடர்ந்து மற்றும் ஒரு அமைச்சர்...!திமுக ஆட்சி க்ளோஸ்...!

Ponmudi, mkstalin,senthilbalaji
Ponmudi, mkstalin,senthilbalaji

செந்தில் பாலாஜி விஷயத்தில் திமுக அரசு முழு பலத்தை நிரூபிக்க சென்று தற்போது பெரும் சிக்கலில் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிக்கி இருப்பது பெரும் பதற்றத்தை ஆளும் கட்சிக்கு ஒருபுறம் கொடுத்து இருக்க தற்போது பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்துவதற்கான காரணங்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.


யாரும் எதிர்ப்பாக்காத நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களிலும், விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை முதல் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருவது திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதே வேலையில் செந்தில் பாலாஜி வழக்கு மூலம் தற்போது எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் திமுக நிற்கிறதாம்.

அமலாக்க துறைக்கு எங்கும் செல்லவும் யாரையும் விசாரணை செய்யவும் சோதனை நடத்தவும் உரிமம் இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் கொடுத்து தீர்ப்புதான் இப்போது பொன்முடி வீட்டில் அமலாக்க துறை களம் இறங்க காரணமாக பார்க்க படுகிறது.

செந்தில் பாலாஜி போல் பொன்முடி மருத்துவமனையில் அட்மிட் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை என இப்போது பொதுமக்கள் கூட பேசும் நிலைக்கு செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக எடுத்த சட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் விவாதத்தை உண்டாக்கி இருக்கின்றன எனவே பொன்முடி மருத்துவ காரணங்களை காரணம் காட்டி அட்மிட் ஆனால் அது பெரும் பக்க விளைவுகளை பொதுமக்கள் மத்தியில் உண்டாக்கும் என்பதால் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாக விரைவில் பொன்முடி தரப்பில் அறிக்கையோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்போ நடத்த வாய்ப்புகள் இருக்கிறதாம்.

பொன்முடி மீது பல முறைகேடு வழக்குகள் இருப்பதால் தற்போது கனிம வள முறைகேடு வழக்கில் பொன்முடி அமலாக்க துறையால் விசாரணை செய்யப்படலாம் எனவும் விஷயம் பெரிது என்பதால் இன்று பெங்களூரு எதிர் கட்சிகள் கூட்டத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரும் என்ன செய்வது என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் ஊழல் புகாரில் சோதனைக்கு உள்ளாவது திமுக மீதான மக்களின் நம்பிக்கையை சிறுக சிறுக சிதைத்து வருவது குறிப்பிடத்தக்கது. உயர் கல்வி துறை அமைச்சராக இருந்து பொன்முடி பல நேரங்களில் சர்ச்சையில் சிக்கியதும் ஆளுநருடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்த பொன்முடியின் பதவியும் பொறுப்பும் அமலாக்க துறை விசாரணையால் என்ன ஆக போகிறது என அதிர்ந்து கிடக்கிறதாம் பொன்முடி வட்டாரங்கள்.