சமீப காலமாக அமலாக்க துறையின் நடவடிக்கை என்பது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் திமுகவின் முக்கிய அமைச்சராகவும் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வருகின்ற பொன்முடிக்கு சம்பந்தப்பட்ட ஒன்பது இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுதலை ஆனார், அதாவது 1996 - 2001 ஆண்டு கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி நில மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் 1996 மே - 2002 மார்ச் ஆகிய காலகட்டத்தில் வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிந்த வழக்கு ஆகிய இரு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அதோடு அமலாக்கத்துறை தரப்பிலும் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் தான் தனது சோதனையை நடத்தி முடித்தது, மேலும் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்காக நடைபெற்ற வழக்குகளில் அமலாக்கத்துறை வசம் சாதகமாக இருப்பதால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தால் கொக்கி போட்டு அமலாக்கத்துறை தூக்கிவிடும் என்ற அளவிற்கு அமலாக்கத்துறை தற்போது தயாராக உள்ளது!
தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி பக்கம் திரும்பி உள்ளது. இன்று அதிகாலை 7 மணி அளவில் ராணுவ படை வீரர்களுடன் காவல்துறைக்கும் முன்னறிவிக்காமல் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய ஒன்பது இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காக இறங்கி உள்ளது அமலாக்கத்துறை. மேலும் இந்த சோதனையில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்பி அவர்களின் வீடு அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லம், விழுப்புரம் சண்முகபுரம் காலனி உள்ள அமைச்சர் பொன்மொழியின் வீடு மற்றும் பல இடங்களில் அமலாக்கத்துறை ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் சோதனையில் ஈடுபட்டு வருகிறதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரம் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் அந்த வீட்டில் தோட்டக்காரராக ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார் என்றும் அவரிடமும் அந்த வீட்டிற்க்கான சாவி இல்லை என்று கூறப்படுவதாகவும் அடுத்து என்ன செய்யலாம் அமைச்சர் பொன்முடி வரும் வரை காத்திருக்கலாமா அல்லது வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு சோதனை மேற்கொள்ளலாமா என அமலாக்கத்துறை ஆலோசனை நடத்தி கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரையில் அமைச்சர் பொன்முடி எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளிவராத காரணத்தினால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்து என்ன நடவடிக்கையில் இறங்குவார்கள் என்பது தெரியாத புதிராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை ஏன் சோதனை நடத்துகிறது என்பதற்கான விளக்கம் செய்தியாக வெளிவந்துள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய செம்மண் குவாரி தொடர்பான வழக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டுள்ளது அதற்கான சோதனையை தற்போது அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. முதலில் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சர் பொன்முடி இப்படி திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மாறி மாறி அமலாக்க துறையின் ரெய்டில் சிக்கி வருகின்றனர் செந்தில் பாலாஜி தொடர்புடைய ரெய்டு அமலாக்கத்துறை மேற்கொண்டபோது முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.
தற்போது அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்த இறங்கி உள்ள நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பெங்களூர் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.