24 special

இதுக்கு பேசாமலே இருக்கலாமே ...!அன்பில் செய்த காரியத்தால் வந்த வினை..!

Anbil mahes
Anbil mahes

சமீப காலமாக பள்ளிகல்வித்துறை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் திமுக அரசை நோக்கியும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ,முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் நினைவாக மதுரையில் நூலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். 


கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழாவிற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி நாடார் ஆகியோர் கலந்துகொண்டனர். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலைஞரின் உருவச் சிலையை திறந்து வைத்த பின் நூலகத்தை திறந்து வைத்தார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய அமைச்சர்களான ஏவா வேலு துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாங்கள் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் இந்த  நூலகமும் என சுட்டிக்காட்டி பேசினார். 

நூலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘முதலமைச்சரின் முதல் கண்ணான சுகாதாரத்தை காப்பாற்றும் வகையில் சென்னை மாநகரில் மருத்துவமனையை கட்டியதாகவும் அதற்கு அடுத்த கண்ணாக கல்வியை காப்பாற்றும் வகையில் மதுரை மாநகரில் இந்த நூலகத்தை கட்டியதாகவும் தெரிவித்தார். மேலும் முதற்கண் ஆக  திகழும் மருத்துவமனை உடலுக்கானது என்றும் இரண்டாவது கண்ணாக திகழும் கல்வி சமுதாயத்திற்கானது என்றும் தெரிவித்தார் மேலும் பல கவிதைகளை கூறி முன்னாள் முதலமைச்சர் கலைஞரையும் முதலமைச்சர் மு க ஸ்டாலினையும் சரவெடியாய் புகழ்ந்து தள்ளிவிட்டு இறுதியாக ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழருக்கும் இணையாக இருவரையும் ஒப்பிட்டு பேசியதுதான் இப்போதைய பஞ்சாயத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. 

வழக்கம்போல் பேசுகிறேன் என பேசாமல் அமைச்சர் அன்பில் மகேஷ்  'முன்னாள் முதலமைச்சர் கலைஞரை ராஜராஜ சோழன் ஆகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை ராஜேந்திர சோழன்' ஆகவும் ஒப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் ட்ரோலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது சமூக வலைத்தளத்தில் பெரும்பாலான இணையவாசிகள் இந்த சோழர்கள் விவகாரத்தை வைத்து கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை காட்சிகளை வைத்து கிண்டல் செய்யும் அளவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழன் அண்ணா நூலகத்தை கட்டினார் என்று கலைஞரையும் ராஜேந்திர சோழன் கலைஞர் நூலகத்தை கட்டினார் என முதலமைச்சர் மு க ஸ்டாலினையும்  கூறியுள்ளார். இந்த சொல்லாடல் சமூக வலைதளங்களில் கேளிக்கையாக மாறி தற்போது மீம், காமெடி வீடியோ என திமுகவை கிண்டல் செய்யும் விதத்தில் மாறியுள்ளது.

இவ்வாறாக  முதல்வரை புகழ்கிறேன் என்ற பெயரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்த காரியத்தால் இணையதளத்தில் டிரோலாக வைரலாகும் நிலையில் 'இதுக்கு பேசாமலே இருந்திருக்கலாம்' திமுக மூத்த தலைவர்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை, மாமன்னன் விவகாரம், முதல்வரின் போட்டோஷூட், அமைச்சர்களின் பேச்சுக்கள் என திமுக அரசின் சில செயல்பாடுகள் ட்ரோல் செய்யப்படும் நிலையில் இப்படி பேசுகிறேன் என்ற பெயரில் அமைச்சர் அன்பில் மகேஷ் வான்டட்டாக கன்டென்ட் கொடுத்துவிட்டார் எனவும் வேறு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேச்சுக்கள் அடிபடுகிறது.