24 special

உங்க காருக்கு இது ரொம்ப அவசியம்.... எலியிடமிருந்து காரை காப்பாற்றுவது எப்படி?

car
car

கஷ்டப்பட்டு படித்து ஒருவர் தனது முதல் சம்பளத்தை வாங்கிய உடனே பல கனவுகளில் கட்டி விடுவார்கள். இப்படியே சம்பாதித்து வீடு கட்ட வேண்டும், பல இடத்திற்கு செல்ல வேண்டும், அதிக சேவிங்ஸ் வைக்க வேண்டும் என்று ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடுவார் அப்படி முதல் சம்பளம் மட்டும் இன்றி வேலைக்கு செல்வதற்கு முன்பாகவே பல ஆண் மற்றும் பெண்களின் முக்கிய ஆசை கனவாக இருப்பது கார் வாங்க வேண்டும் என்பதுதான்! ஏனென்றால் சிலருக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்பது விருப்பமாகவும் ஆசையாகவும் இருந்தாலும் கூட, மழையும் வெயிலும் நமது பயணத்தை தடை செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள் நான்கு சக்கர வாகன பயணத்தையே விரும்புவார்கள்.


அதனால் எப்படியாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என்பதற்காக இரு சக்கரங்களை தனது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியோடு கற்றுக்கொண்டு நான்கு சக்கர வாகனங்களை கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கும் செல்வார்கள். பயிற்சி வகுப்புகளுக்கு சென்று நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற்ற உடனே எப்படியாவது ஒரு சூப்பரான காரை வாங்கி விடுவார்கள். அல்லது பழைய கார் ஒன்றினை வாங்கி அதனை புதிது போன்று பளபளப்பாகி விடுவார்கள். சமீப காலங்களில் எல்லாம் புது கார்களை தேடி தேடி வாங்குவதை விட பழங்காலத்து கார்களை வாங்கி அதனை இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கம் செய்வதுதான் மிகவும் ட்ரெண்டாக போய்க் கொண்டிருக்கிறது. 

அப்படி கார் வாங்கியவுடன் அந்த காரை நிறுத்துவதற்கான இடம் நம் வீட்டில் இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது, வீட்டில் இல்லாமல் தெருவின் சாலை ஓரத்தில் நிறுத்தினால் மழையிலும் வெயிலிலும் கிடந்து வாகன தூசி கொள்ளும் சிக்கிக் கொள்ளும் அந்த வாகனம்! சரி அந்த பிரச்சனை இல்லை பார்க்கிங் செய்வதற்கு நல்ல இடம் இருக்கிறது என்றால் அந்த வாகனத்தை எலிகளிடமிருந்து காப்பாற்றுவது மிகப்பெரிய வேலையாகி விடும். ஆமாம் கார்களின் உள்ள வயர்களில் இந்த எலி புகுந்து கொண்டு வயர்களை கடித்து பழுதாகி விடுகிறது அதை சரி செய்வதற்காகவே பல நேரங்களில் காரை எடுத்துக்கொண்டு மெக்கானிக் ஷெட்டிற்கு சொல்ல வேண்டி இருக்கும் அல்லது பழுது பார்ப்பவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டி இருக்கும் அப்படி எலி கடித்து விடும் வயர்களை சரி செய்வதற்கே ஆயிரக்கணக்கு செலவு செய்ய நேரிடும். காரை வாங்குவது ஒரு போராட்டம் என்றால் அந்த காரை எலி இடமிருந்து பாதுகாப்பது அதைவிட பெரும் போராட்டமாக இருக்கிறது என்று காரின் உரிமையாளர்கள் தங்கள் நண்பர்களிடம் குழம்பிக் கொள்வதையும் நாம் பல நேரங்களில் கேட்டிருப்போம். 

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்று உலா வருகிறது. அந்த வீடியோவில் இனி எலி தொல்லையிலிருந்து காரை நாம் எளிதாக காப்பாற்றி விடலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன்படியே அந்த வீடியோவிலும் எப்படி எலி காரின் வயர்களை கடிக்காமல் பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒரு வழியையும் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த வழியும் சாத்தியமாகாது என்று கமெண்ட்டுகள் எழுந்துள்ளது. அதாவது காரின் அடிப்புறம் முழுவதையும் மற்றும் சக்கரங்கள் பொருத்துவதற்கு முன்பும் அனைத்தையும் ஒரு வலையிட்டு அடைத்து விட்டால் அதன் மூலம் எலியால் உள்ளே செல்ல முடியாது என்று நம்பப்பட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால் லோவராம்,  அப்பராம், டிரைவ் சாப்ட் கேப்பில் வழியே எலி புகுந்துவிடும் என்று ஒரு நெடிசன் பதிவிட்டுள்ளார். இது காரை வாங்கி எலி தொல்லையால் அவதி ஊற்றி வருபவர்கள் அனைவருக்கும் ஒரு தீர்வு கிடைத்து விட்டது என்று நிம்மதி அடைந்தவர்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.