24 special

பெட்ரோல் குண்டு வீச்சுக்கு.....அந்த மாநில ஆளுநர் ஆதரவு அப்படி போடு!

mk stalin
mk stalin

சென்னையில் கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பேசும் பொருளாக மாறியது. இதற்கு முழு காரணம் திமுகவை சேர்ந்தவர்கள் என குற்றம் எழுந்த நிலையில் தமிழ்நாட்டு ஆளுநருக்கு ஆதரவாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. அதில் பெட்ரோல் ஊற்றும் விதமாக அமைந்திருக்கிறது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.


தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை திமுக அரசு உடன் தொடர்ந்து மோதல் போக்கு நிறைந்து வருகிறது. கடந்த வாரம் சென்னையின் பிரபல ரவுடியான கருக்கா வினோத் ஆளுநர் மளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் சர்ச்சையாக எழுந்தது. இந்த சம்பவத்திற்கு திமுக அரசு ஒன்று சேர்ந்து ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்தனர். இதற்கு முழு பொறுப்பு பாஜக தான் என்று விமர்சித்து வந்தனர்.

ஏற்கனவே தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பார். தமிழக மக்களுக்கு குரல் கொடுத்து அவப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தி பேசுவார். தற்போது ஆளுநர் மாளிகையில் குண்டு வீசப்பட்டதற்கு கூட திமுக அரசை தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில் திமுகவை விமர்சிக்கும் வரிசையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருப்பவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

பரமக்குடியில் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கேரளமும் தமிழகமும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல்வேறு கட்டங்களிலே ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆபத்தை சந்தித்திருக்கிறது. பல இன்னுயிர்களை இழந்திருக்கிறது.துரதிருஷ்டவசமாக இரு மாநில அரசுகளும் (தமிழ்நாடு, கேரளா) பயங்கரவாதிகளை ஆதரிப்பதுதான் இஸ்லாத்தை ஆதரிப்பது போன்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். அங்கே இருக்கின்றன கம்யூனிஸ்ட் அரசாங்கமாக இருக்கட்டும் இங்கே ஸ்டாலின் தலைமையில் இருக்கிற திமுக அரசாங்கமாக இருக்கட்டும்.. வெடிகுண்டுகளை வைப்பவர்களையும் கொலைகாரர்களையும் பாதுகாக்கின்றன அரசாங்கமாக இருக்கின்றன.

இதனால்தான் இந்த வன்முறையை நம்மால் அடக்க இயலவில்லை.நேற்று கேரளா மாநிலத்தில் குண்டு வெடிப்புக்கு பதில் அளித்த அவர், முக்கியமாக ஒரு கிறிஸ்தவர், தம்முடைய கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்திருப்பார் என்பது யாருக்குமே நம்பிக்கை இல்லாதது. கேரளா அரசு முனைப்போடு செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்அல்லது என்.ஐ.ஏ. தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதுதான் இந்த பேராபத்தை தடுக்க உதவும். இவ்வாறு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தார்.