24 special

இபிஎஸ்க்கு எதிராக பொங்கி எழுந்த தேவர் குலம்!...புன்னகையுடன் வெளியே சென்ற இபிஎஸ்!

edapadi, devar
edapadi, devar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள். இதன் பகுதியாக பசும்பொன்னில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்ட போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது.


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் காலையில் சென்று மரியாதையை செலுத்தினார்.அதன் பின் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்றார்.  அதன் பிறகு பலத்த பாதுகாப்புக்கு பின் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பங்கேற்று மரியாதை செலுத்திய போது அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது.

எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .கட்சி தொண்டர்கள் வேனை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு கொடுத்தும் கூட அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவியது.தொண்டர்கள் ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு அளித்தாலும் கூட எடப்பாடி ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி எடப்பாடி சென்றார்.பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

அதில், சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான்; சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர்.அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாகவே ஓபிஎஸ் தரப்பினர் கூறுகையில் தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டால் பதற்றமான சூழல் தான் ஏற்படும் மற்றும் அசிங்க படவேண்டிய சூழ்நிலை  ஏற்படும் என்று கூறினார்.அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் எடப்பாடி கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது, அவர் இங்கே வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மனு அளித்திருந்தனர். இருப்பினும் இன்று எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட அவருக்கு அங்கு எதிராக கோஷம் எழுப்பியது அதிமுக நிர்வாகிகளிடம் சோகத்தில் தள்ளியது.