அதிமுக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையில் ரூ.4ஆயிரத்து 800 கோடி முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு ஊழல் நடந்திருப்பதாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதன் விசாரணையில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு முழுவதும் எதிர்கட்சியினர் மட்டுமே வழக்குகளை எதிர்கொள்வதாகவும் ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை எதிர்கொள்வதில்லை என்றும் கருத்து கூறி நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் அமர்வு குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைத்தனர். ''நீதிபதிகள் பேலா எம். திரிவேதி தலைமையிலான அமர்வு உத்தரவுவிட்டது. மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட வேண்டும்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதம், நீதிபதி பேலா எம். திரிவேதி அமர்வு முன் விசாரணை நடைபெற்றால் என்ன தவறு! ஈபிஎஸ் தரப்பு வாதம் முன் வைத்தது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கோரிக்கையினை தலைமை நீதிபதி முன் வைக்குமாறு நீதிபதி பீலா எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டார்".
எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின் அவரது ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்க முன் வந்துள்ளது. தற்போது பொது குழு கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்தும் தீர்மானம் குறித்து மேல் முறையீடு செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனுவை நீதிமன்றம் ஏற்று கொண்டது. இதனால் அதிமுக சின்னம் மற்றும் பொது செயலாளர் மாற்றும் விரைவில் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. திமுக கட்சியை தொடர்ந்து ஐடி துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், இப்போது லோக்சபா தேர்தலை கொண்டு அதிமுக பக்கம் செல்ல உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.மேலும், கொடநாடு கொள்ளை வழக்கில் என்னை கைது செய்யப்படலாம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.