தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் ஒருவர் பாலையா, இவர் நடிக்கும் படங்கள் தெலுங்கு ரசிகர்களால் மட்டுமல்லாமல் தென்னிந்திய மசாலா சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். அவ்வப்போது பாலையாவை வைத்து தமிழ் சினிமாவில் குறிப்பாக, தமிழ் சினிமா இடதுசாரி ரசிகர்கள் ட்ரோல் செய்வதும், மீம்ஸ் போடுவதும், ஒரே அடியில் 10 பேர் பறப்பது, ஒரே அடியில் லாரி பறப்பது, ஒரே அடியில் டாட்டா சுமோக்கள் பறப்பது என பல வீடியோக்களை வைத்து இவரை கிண்டல் செய்து வருவார்கள். ஆனால் இவர் சமூக அக்கறையுடன் பொது மக்களுக்கு கருத்து சொல்வதும், ஹிந்து மத வழிபாடு மற்றும் இந்து மத சடங்குகளை பழித்து பேசுபவர்களை இவர் எதிர்த்து டயலாக் வைப்பதும், சனாதன தர்மத்தை புகழ்ந்து பேசுபவர்களை இவர் எதிர்ப்பதும் இவர் படங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த நிலையில் இவரை இது காரணமாகவே தமிழ் சினிமாவில் நிறைய இடதுசாரிகள் கிண்டல் செய்வார்கள். சனாதன தர்மத்தை ஆதரிக்கிறார், ஹிந்து மத கோட்பாடுகள் மற்றும் சடங்குகளை இவர் பாராட்டி பேசுகிறார் என்று இதன்காரணமாகவே இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை இடதுசாரிகள் மத்தியில் எதிர்ப்புகள் அதிகம். இந்த நிலையில் இவரது சமீபத்திய படத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தைகளின் குட் டச், பேட் டச் என்பது குறித்து எப்படி இருக்க வேண்டும் என இவர் படத்தில் பேசும் ஒரு காட்சி தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் பாலையா நடித்த படமான பகவந்த் கேசரி என்ற திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த படத்தில் சில காட்சிகள் இணையத்தில் தற்பொழுது வீடியோக்களாக கட் செய்யப்பட்டு உலா வருகிறது, அந்த படத்தின் ஒரு காட்சியில் ஒரு குழந்தையிடம் இவர் கேட்பார் எங்கு தொட்டார்கள் என்று அதற்கு அந்த குழந்தை சொல்வதை வைத்துக்கொண்டு இவர் மற்ற குழந்தைகள் முன்பு மேடை ஏறி பேசுவார். அப்பொழுது எங்கெல்லாம் தொட வேண்டும், எங்கெல்லாம் தொடக்கூடாது எது தொட்டால் தப்பு? என இவர் கூறிவிட்டு யாராவது தவறாக தொட்டார்கள் என்றால் நீங்கள் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள். அது உங்கள் நண்பராக இருந்தாலும்! உங்கள் உறவினராக இருந்தாலும்! யாராக இருந்தாலும் சரி ஏன் உங்கள் தகப்பனாகவே இருந்தாலும் நீங்கள் உங்கள் தாயிடம் சொல்ல வேண்டும் என பேசும் இந்த வீடியோ தான் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இதுபோன்ற விஷயங்களை எல்லாம் ஏன் கூற மாட்டேன் என்கிறார்கள் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் குறிப்பாக புரட்சி பேசும் போராளிகள் ஏன் இதுபோன்ற படங்களை எல்லாம் மக்களுக்கு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் நாட்டில் நிலவும் பெரும்பான்மையான பிரச்சினையை அழகாக புரியும்படி ஒரே கட்சியில் எடுத்து பாலையாவால் கூற முடியும் போது தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகர்களால் ஏன் முடியாது? ஏன் நல்ல விஷயங்களை கூற மாட்டேன் என்கிறார்கள்? என்பது போன்ற கமெண்ட்கள் இணையதளத்தில் பறக்கின்றன. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே புரட்சி என்ற பெயரில் குழப்பம் விளைவிக்கும் காட்சிகளைத் தான் கதாநாயகர்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்துள்ள இதே நேரத்தில் இப்படி பாலையாவின் காட்சியை வைத்தும் தமிழ் சினிமாவின் கதாநாயகர்களை விமர்சனம் செய்தும் வருகின்றனர் இணையவாசிகள்.