24 special

பொதுப்பணித்துறையை குறிவைத்த ஐடி, அமலாக்கத்துறை?....பரபரப்பாகும் சோதனை!

ED, IT
ED, IT

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தொடங்க இன்னும் நான்கு, ஐந்து மாதமே உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை முதல் சென்னையில் பல இடங்களில் இரண்டு துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் குறிப்பாக 2023ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபடுவது ஆளும் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கிடைக்காமல் புழல் சிறையில் இருந்து வருகிறார். மேலும் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் நகை கடையில் சோதனையில் ஈடுபட்டனர். வாரத்திற்கு எங்காவது ஒரு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு அரசியல் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற் சாலையில் சோதனையை தொடங்கினர். அதேபோன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்து உள்ள ஜெயின் வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே பகுதியில் உள்ள பொது பணித்துறையில் இருக்கக்கூடிய அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புரசைவாக்கம் பகுதியில் உள்ள மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சோதனை செய்து வருகின்றனர். சமீபத்தில் மணல் குவாரிகளில் சோதனை செய்ததன் அடிப்படையில் முதன்மை நீர்வளத்துறை அதிகாரி முத்தையாவிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இப்போது மீண்டும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை இரண்டு குழுக்களாக சோதனையில் இறங்கியுள்ளது தமிழக அரசியலில் இருக்கும் முக்கிய தலைவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியள்ளது. மேலும், பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வெகு வீட்டில் இந்த மாதம் முதலே அவருக்கு தொடபுடிய மாவட்டத்தில் சுமார் ஒரு வாரமாக சோதனை நடத்தினர்.

அதன் பிறகு இரண்டாம் கட்டமாக கடந்த வாரம் திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவ கல்லுரியில் சீல் வைத்த அறைகளில் சோதனை தொடங்கினார்கள். இதன் அடிப்படையிலே இன்று சென்னையில் உள்ள பல இடத்தில சோதனை செய்வது திமுகவில் இருக்க கூடிய பொதுப்பணி துறை அமைச்சர் எவ வேலுவுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் உள்ள பெரிய தலைகளை கைது செய்து செந்தில் பாஜியுடன் உள்ளே போடா மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என்று தெரியாது என்பது போல் வினாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.