![seeman, achi masala](https://www.tnnews24air.com/storage/gallery/OYzCfm4nB2LpYaKKq0eoxUuojFu4ijPeHZtQrzst.jpg)
தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் ஒரு குறிப்பிட்ட தக்க இடத்தை பெற்றுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த நடவடிக்கைகளையும் இக்கட்சி தீவிரமாக எடுத்து வருகிறது அதோடு இதுவரை எந்த மாற்றுக் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் திமுகவையும் பாஜகவையும் ஏன் அனைத்து கட்சிகளையும் எதிர்த்து விமர்சிக்கும் வகையில் பேசி வருவார். அதனால் பல நேரங்களில் சில எதிர்ப்புகளையும் பெற்று வருபவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்! கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிபோனத்திற்கு பின்னால் பாஜக இருக்கிறது அதனால் தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் வைத்திருக்கக்கூடிய தாமரை சின்னத்தின் மீது வழக்கு பதிய உள்ளோம் என்றும் ஏற்கனவே நாங்கள் மயில் சின்னத்தை கேட்டிருந்த பொழுது தேசிய பறவை என்பதால் அதனை ஒரு கட்சிக்கு சொந்தமானதாக கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது, அதனை தொடர்ந்து விவசாய சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று கூறினார்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமான் அவர்களே கூறுகிறார் மழை வெள்ளத்தின் பொழுது சின்னத்திற்கு விண்ணப்பிக்க மறந்து விட்டோம் என்று அதற்கு பிறகு ஏன் அவர்கள் விண்ணப்பிக்கவே இல்லை அவர் விண்ணப்பிக்காமல் இருந்ததற்கு பாஜகவை எதற்கு குற்றம் கூறுகிறார் என்று பதிலளித்திருந்தார். அதோடு சீமான் இந்த விவகாரத்தில் பல விமர்சனங்களை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மற்றுமொரு பரபரப்பான தகவலை பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்! அதாவது சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் சக்தி மசாலா பவுடர் பாக்கெட்டின் நகலை காண்பித்து அந்த பாக்கெட்டில் மிளகாய் பொடி என்று முதலில் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி எந்த வெள்ளைக்காரி வந்து இப்போ உன்கிட்ட இந்த பவுடரை வாங்கிட்டு இருக்கா? அதோடு இந்த நிறுவனத்தின் முதலாளி தமிழர் ஆனால் அவர் தமிழை எங்கு வைத்திருக்கிறார் என்று பாருங்கள் முதலில் ஆங்கிலம் பிறகு விளங்காத ஹிந்தி, அதற்குப் பிறகு தமிழில் எழுதி இருக்கிறார்.
இதனை நாங்கள் பலமுறை மாற்றங்கள் என்று அறிக்கை கொடுத்துவிட்டோம் ஆனால் அவர்கள் மாற்றவில்லை என்ன பண்ணிடுவான் சீமான் என்ற வகையிலே இதனை மாற்றாமல் இருந்து வருகிறது இந்த சக்தி நிறுவனம்! இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று முதலில் தமிழில் எழுதினால் குறைந்து விடுமா! என்று சக்தி மிளகாய் பொடியை காண்பித்து காரசாரமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து சக்தி மிளகாய் பொடியை விமர்சித்து பேசிய சீமான் ஏன் ஆட்சி மிளகாய் பொடியை விமர்சிக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது, ஆச்சி மசாலா சீமானின் சமூகமான நாடார் சமூகத்தை சேர்ந்தவர் நடத்தி வரும் நிறுவனம்! அதுமட்டுமல்லாமல் ஆச்சி மசாலா நிறுவனம் கிறிஸ்தவ சமூகத்தை பின்பற்றுவது . மேலும் அவர்கள் சீமானுக்கு உதவி செய்வதாகவும் தெரிகிறது அதனால் தான் தற்போது ஆட்சி மசாலா குறித்து விமர்சனத்தை முன் வைக்காமல் சக்தி மசாலா குறித்த விமர்சனத்தை மட்டும் சீமான் முன்வைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.