சொந்தக் கட்சியில் இருந்து கொண்டே அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் வழக்கமானதாக இருக்கலாம், ஆனால் பாஜகவில் எப்போர்ப்பட்ட நிர்வாகியாக இருந்தாலும் கட்சி நடவடிக்கையை மீறி நடந்தால் பதவி பறிக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்பதை அண்ணாமலை இன்று ஆணித்தணமாக நிரூபித்துள்ளார்.
பாஜகவில் சமீபத்தில் இணைந்து ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் திருச்சி சூர்யா. ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக டெய்சியை திருச்சி சூர்யா மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் ஆடியோ சோசியல் மீடியாவில் வெளியானது. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜகவில் முக்கிய நிர்வாகி ஒருவர், பெண் நிர்வாகியை தரக்குறைவாக பேசுவது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.
திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து விலக்குவது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், காயத்ரி ரகுராம் வாண்டடாக வந்து வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டார். சூர்யாவின் இந்த ஆடியோ இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆடியோ தொடர்பாக அவரும் இதுவரை மறுப்பு எதுவும் வெளியிடவில்லை. பாஜக மூத்த உறுப்பினர், அயலக மற்றும் வெளிமாநில தமிழர் நல பிரிவு செயலாளர் காயத்ரி ரகுராம் இதை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள், சைக்கோ என்றெல்லாம் திருச்சி சூர்யாவை பொதுத்தளத்தில் விமர்சித்ததோடு, திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு என்றும் பதிவிட்டிருந்தார்.
திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை முடிவெடுத்திருந்த சமயத்தில் சொந்தக்கட்சியையே விமர்சிக்கும் தொனியில் காய்த்ரி ரகுராம் வெளியிட்ட பதிவு மூத்த நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால் காயத்ரி ரக்ராம் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் கட்சியின் ஒப்புதல் பெற்றே இனி பாஜக நிர்வாகிகள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும்.
கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால், அதை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கட்சியிலிருந்து 6 மாத காலம் நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் காயத்ரி ரகுராம் கூறியது: "பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்ததால் இதுவரை மியான்மர், கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 28 தமிழர்களை இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளேன். இதுபோன்ற விஷயங்கள் பலவற்றை நான் எனது சொந்த செலவிலேயே செய்துள்ளேன். அப்படியிருக்கும்போது, நான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியிருப்பது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராமின் பேட்டியைப் பார்த்த பாஜக தொண்டர்கள் பலரும் இப்ப புலம்பி என்ன செய்ய, பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சியிருக்கனும் என விமர்சித்து வருகின்றனர்.